Welcome to our site.!!

Saturday, 21 January 2017

கபிலனின் கிறுக்குகள் !

 


                                
முக்கியமா சொல்லனுமே முதல் வரில
சத்தியமா கவிதை இல்ல

காலமெல்லாம் என் கதையும்
கவி பாடதான் கனா கண்டேன் - ஆனால்
கண்ணீருக்கு தானே தெரிந்தது
கவிதை வடிக்க



கதை சொல்ல தெரியாதவனே
கவிதை சொல்றானாம் காமடியா
காரணம் தான் காதலோ??? - இல்ல
காதலியில் கடுப்பிலோ…..

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்!..... - என்று

எங்கிருந்தோ கேட்ட ஞாபகம் எனக்கு
எங்கிருந்தாலும் ஒலிக்க வேண்டும்

பள்ளி பாடத்தையே படித்த நான்
படிச்சு பாராட்ட முடியா
பாரதி கவிதை பார்த்து
படிச்சு என்ன லாபம் எண்டு
படிக்காமல் விட்டேனோ???
படிச்சிருந்தால் வடித்திருப்பேனே
பக்குவமாய் பைந்தமிழில்

பிரியாமல் பிரிந்துவந்த
பிரிவுகள் தான் என்றும் நெஞ்சில்
பீரங்கி தாக்குதலாய் - எனினும்
பின்ணணியில் பிரதிபலனாய்
பிருந்தாவனமாமே

எனக்கும் கவிதை வருமா ??
இல்லை கதையாவது வருமா

-கபிலன் ஸ்ரீ 

No comments:

Post a Comment