Welcome to our site.!!

Tuesday, 24 January 2017

கலவரங்களுக்கு காரணம் யார்?


சேனாதிபதி, ஆதி, ராஜசேகர் போன்றோர் பன்னீர் செல்வத்தை சந்தித்து விட்டு வந்து போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது, மெரினாவில் போராடும் மாணவர்களுக்கு அதிருப்தியை உருவாக்கியது. 
மெரினாவில் வெவ்வேறு குழுக்கள் அரசியல் இயக்கங்கள் தனித் தனிகுழுக்களாக மேடை அமைத்த போதிலும் இக்கருத்துகள் எதையும் போராடும் மாணவர்கள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.

இன்று காலை 10 மணிக்கு ஊடகங்களை அழைத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்கிறோம் என்று அறிவிக்க இருந்தார்கள். ஆனால் நேற்று இரவே இரண்டு ஊட்கங்கள் சென்று மாணவர்களை கலைந்து செல்லுங்கள் என்று மாணவர்களை நிர்பந்தித்திருக்கிறார்கள். அதிகாலை மூன்று மணியளவில் ஒரு தொலைக்காட்சி லைவ் வேனுக்குள் டெலிகாஸ்டுக்காக தயராக மாணவர்கள் சந்தேகம் அடைந்து அவர்களிடம் கேட்க அவர்களோ மழுப்பியிருக்கிறார்கள். 


ஆனால் அவர்கள் லைவுக்கு ரெடியான கொஞ்சம் நேரத்தில் போலீஸ் வந்து கலைந்து போகுமாறு சொல்ல அவர்கள் அரை நாள் நேரம், குறைந்த பட்சம் பத்து மணிவரை நேரம் கொடுங்கள் முடிவை அறிவிக்கிறோம் என்று சொல்ல எதற்கும் சம்மதிக்காத போலீஸ் அவர்களில் பலரை அடித்து இழுக்க, அதில் பலரும் காயமடைந்திருக்கிறார்கள். அப்பகுதி மீனவர்கள் உதவிக்கு வர அவர்கள் குடியிருப்புகளை போலீசர் தாக்க அதுவே கலவரமாக மாறியுள்ளது.
அதிமுக அரசின் அணுகுமுறை பிழையானது. நம்மை மண்டியிட வைத்து விட்டார்களே என்ற கோபத்தில் திட்டமிட்டு வேண்டுமென்றே இந்த தாக்குதலை மோடியின் உத்தரவில் நிறைவேறுகிறார் பன்னீர்.



எழுச்சியென்பது எப்போதும் ஒடுக்கு முறைகளுக்கு முகங்கொடுத்தபடிதான் முன்னேறிச்செல்லும்,அதிலும் அறவழிப் போராட்டங்களின் எழுச்சிகளை அடக்குமுறைகளூடாக இலகுவாகவே அரசுகளால் கையாளக்கூடியதாக இருக்கும்,இலக்கினை நோக்கிய படிப்படியான வெற்றிகளை உறுதிப்படுத்தியபடி முன்னேறிச்செல்வது மிக முக்கியமான நகர்வு, அது தோல்வியல்ல..." 

"அன்று 'அந்தக்கடற்கரைகளில்' எரிந்த தீயை
அணையவிடாது அக்கினிக்குஞ்சாய்
அள்ளி எடுத்துச் சேமித்து வை...
அடுத்த தீ மூட்ட விழிப்போடு காத்திரு"
தமிழா!....."நில்...கவனி...முன்னேறு..

No comments:

Post a Comment