Welcome to our site.!!

Thursday, 5 January 2017

மகேந்திர சிங் தோனி...!

Captain MSD மகேந்திர சிங் தோனி,உலக உதடுகள் ஒட்டுமொத்தமாய் உச்சரிக்கும் ஒரு ஆச்சரியப் பெயர் .இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் பணம் புகழ் வளர்ச்சி எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் தான் காரணமென சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் எத்தனை வெற்றிகள் காண்பித்தாலும் புரியப் போவதில்லை...
ஆடுகளத்தின் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் அப்படி ஒரு அசாத்திய மனிதனை யாராலும் பார்க்க முடியாது. எப்போதும் கூல்...!!!
தன் அணியின் வீரர்களை ஒரு பொழுதும் விட்டுக் கொடுக்காமல், வெற்றி வந்தால் அவர்கள் கைகளில் கொடுத்துவிட்டு, தோல்வி வந்தால் தன் தோள்களில் ஏந்திக்கொள்ளும் பக்குவத்தை எந்த தலைவனிடம் பார்த்திருக்கிறீர்கள்?
தோல்வியின் கைகள் கட்டியணைக்க காத்திருக்கும் காட்சிகள் கண்முன்னே தெரிந்தாலும், விடாமுயற்சியால் வெற்றியின் விரல்களைப் பிடித்து இழுத்து வரும் அந்த போராட்ட குணத்தை எந்த தலைவன் காட்டியிருக்கிறான் ...?
ஆட்டம் கைவிட்டுப்போகும் நிலைமையை உணரும் நேரத்தில் பொசுக்கென ஆட்களை இடம் மாற்றி வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் தந்திரத்தை யார் சொல்லியிருக்கிறார்கள்...?

கடைசிநிமிட பரபரப்புக்கு இடையிலும், அணியின் ஒவ்வொருவரும் நம்பிக்கை இழந்து நிற்கையிலும், அனைவரையும் தேற்றி, வெற்றிக் கனியை பறித்துக் கொள்ளும் யுக்தியை எத்தனை பேர் கையாண்டிருக்கிறார்கள் ...?
வெற்றிக்கோப்பைகளை கைகளில் வாங்கிய அடுத்த நொடி அதை அணியினரிடம் கொடுத்துவிட்டு ஏதோ ஒரு ஓரத்தில் போய் நின்றுகொள்ளும்
தன்மையை எந்த தலைவனிடம் பார்த்திருக்கிறீர்கள்..?தோல்வினா முன்னால நிப்பான் வெற்றினா பின்னால நிப்பான்.. எப்பவுமே MSD.
புதிதாய் பிறந்த தன் குழந்தையைக் கூடப் போய் பார்க்காமல் இந்த நாட்டுக்காக வெல்லத் துடித்த வெறியை எந்த தலைவனிடம் கண்டீர்கள்...?
ஒரு உலகக் கோப்பையை வாங்குகையில்,
உலகமே ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருந்த போது சிக்ஸராய் தோனி வானத்தில் பறக்கவிட்டது பந்தை மட்டுமல்ல இந்திய மனங்களையும் தானே...?
இந்த எல்லா கேள்விக்குறிகளையும்ஆச்சரியக்குறிகளாய் ஒருவனால் மாற்ற முடியுமென்றால் அது தோனியால் மட்டுமே முடியும்.
இன்னொரு சச்சின் சமயம் வந்தால் சாத்தியமுண்டு...இன்னொரு தோனி
சத்தியமாய் சாத்தியமில்லை...!!!
456 அணித்தலைவர்கள் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் இருந்திருக்கிறார்கள்.தோனி போல ஒருவனை யாரும் கண்டிருக்கவில்லை. அடுத்த நாட்டு அணித்தலைவர்களையும் கவர்ந்த ஒரு தலைவன். 

இங்கிலாந்தின் முன்னால் அணித்தலைவர் Mike Brearley தோணி பற்றி குறிப்பிடும் போது  “Calmness is a very good quality in a captain. So is passion... It is sometimes very difficult to keep that balance right. Your calmness can turn into or become a sort of detachment, which is not helpful... On the other hand, passion can become destructive. It can become scapegoating, you can become too angry, you can become too exercised about things when you don’t have enough detachment or calm. There is a balance between these things."

தோனி இதுவரை விளையாடின  எந்த போட்டி  என்றாலும் கண்டிப்பா வெல்லுவாங்கள் என்று நாங்கள் நினைத்து இருந்தும் வெல்ல முடியாமல் போனால் அந்தப்போட்டியில் எந்த ஜாம்பவான் விளையாடி இருந்தாலும் எதுவும் கிழிச்சிருக்க முடியாது என உணர வைத்த "த"லை"மை!
இதற்கு மேலும் கூட நீங்கள் தோனிக்கு திமிர் என்று சொல்லித்திரிந்தால்...அவன் அந்தத் திமிரோடே இருக்கட்டும்...!!!வாழ்த்துக்கள் தோனி.
இப்படிக்கு... கிரிக்கெட் எனும் ஒரு விளையாட்டை நேசிக்கும் ஒரு சாதாரண ரசிகன்...

No comments:

Post a Comment