Welcome to our site.!!

Tuesday, 31 January 2017

ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை !ரஜினியை விமர்சிப்பதையே பொழுதுபோக்காக கொண்டவர்களுக்கு மட்டும் இப்பதிவு

'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா,கர்நாடகக்காரன், தமிழின விரோதி' - இது ரஜினி குறித்து சில அறிவு ஜீவிகளின் விமர்சனம்!

ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்...

Wednesday, 25 January 2017

இதற்குப் பெயர் வன்முறை இல்லை?...படங்களின் தொகுப்பு !

மயிலாப்பூர் சிட்டி செண்டர் அடுத்துள்ள அம்பேத்கர் பாலம் - தலித்துகள் வசிக்கும் ரூதர்புரம் பகுதிக்குள் நுழைந்த அதிரடிப்படையினர் முப்பதுக்கும் அதிகமான ஆட்டோக்கள், டூ வீலர்கள், கார்களை அடித்து நொறுக்கியும் பெட்ரோல் டாங்குகளை திறந்துவிட்டு கொளுத்தியுள்ளனர். 

Tuesday, 24 January 2017

கலவரங்களுக்கு காரணம் யார்?


சேனாதிபதி, ஆதி, ராஜசேகர் போன்றோர் பன்னீர் செல்வத்தை சந்தித்து விட்டு வந்து போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது, மெரினாவில் போராடும் மாணவர்களுக்கு அதிருப்தியை உருவாக்கியது. 
மெரினாவில் வெவ்வேறு குழுக்கள் அரசியல் இயக்கங்கள் தனித் தனிகுழுக்களாக மேடை அமைத்த போதிலும் இக்கருத்துகள் எதையும் போராடும் மாணவர்கள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.

இன்று காலை 10 மணிக்கு ஊடகங்களை அழைத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்கிறோம் என்று அறிவிக்க இருந்தார்கள். ஆனால் நேற்று இரவே இரண்டு ஊட்கங்கள் சென்று மாணவர்களை கலைந்து செல்லுங்கள் என்று மாணவர்களை நிர்பந்தித்திருக்கிறார்கள். அதிகாலை மூன்று மணியளவில் ஒரு தொலைக்காட்சி லைவ் வேனுக்குள் டெலிகாஸ்டுக்காக தயராக மாணவர்கள் சந்தேகம் அடைந்து அவர்களிடம் கேட்க அவர்களோ மழுப்பியிருக்கிறார்கள். 

"69 " வீடியோ விமர்சனம்(அனிருத் ). 18+ !


சோம்பேறிக்காதலனுக்கும் துணிச்சல்மிக்க காதலிக்கும் நடக்கும் மூன்று நிமிட போராட்டம்தான் படம்.இவ்வளவு சிக்கலான கதையை வாயில் எடுத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பாக இதற்கு முன் யாரும் சொல்லியதில்லை. முதலில் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஹீரோ 40 கிலோ என்றால் ஹீரோயின் அதில் இருமடங்காக 80கிலோ என கதாபாத்திரத்தேர்வுக்கே நெறய மெனக்கெட்டிருக்கிறார்கள்.

Saturday, 21 January 2017

பழைய Joke தங்கத்துரை !

கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட
மாட்டேன்!


பையன்:
உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!


கேர்ள்: ஏன்?


பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!

கபிலனின் கிறுக்குகள் !

 


                                
முக்கியமா சொல்லனுமே முதல் வரில
சத்தியமா கவிதை இல்ல

காலமெல்லாம் என் கதையும்
கவி பாடதான் கனா கண்டேன் - ஆனால்
கண்ணீருக்கு தானே தெரிந்தது
கவிதை வடிக்க

Wednesday, 18 January 2017

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் !

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் !. இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன்.இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன்.தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன். நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன்.அனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும் !! நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

Tuesday, 10 January 2017

இவர்கள் மனிதர்களா ?

நாமக்கல் மாவட்டம் " திருக்கொடி மாடச் செங்குன்றூர் ( திருச்செங்கோடு) அர்த்தனாரீஸ்வர ர் கோவிலின் சிறப்பு !

விமானத்தின் கூரையில் எட்டு கிளிகள், எட்டுத்திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது. இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும். ஆனால் கையில் வராது!

இதுவும் அந்த கல்லில் இணைந்தது தான் !. இந்த சிற்பத்தை சுற்றி அழகிய சிறிய வடிவிலானா சிற்பங்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றது. அதுவும் அதே கல்லில் தான் , இவற்றை எல்லாம் அலங்கங்கரிக்க ஒரே கல்லினால் செய்யப்பட்ட நான்கு கற்சங்கிலிகள், நான்கு மூலைகளில் தொங்கிக்கொண்டுள்ளது ! மனிதர்கள் தான் செய்தார்களா ?

விவரிக்க வார்த்தைகள் இல்லை!

Sunday, 8 January 2017

இன்டர்நெட் (Internet) உருவானது எப்படி ?


இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது என்று பார்ப்போமா? பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்பது உறுதி. எனவே இன்டர்நெட் குறித்த சில கேள்விகள் முதலில் தரப்பட்டுள்ளன. அவற்றிற்கு பதிலை எண்ணிப் பார்த்துவிட்டு பின் கீழே தரப்பட்டுள்ள பதிலுடன் உங்களுடைய பதிலை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். 

Saturday, 7 January 2017

முத்தம் கொடுக்கத் தெரியுமா உங்களுக்கு…?


அன்பின் வெளிப்பாடு முத்தம். அதிகபட்ச ரசனை தேவைப்படும் ரொம்பவே அழகான விஷயம்!காதலர்களின் ஆன்மா உதடுகளில் சந்திக்கும் வைபவம் முத்தம்.சீனப் பழமொழி ஒன்று… முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல… 
குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்! (அதிலும், பார்ட்னர் அம்சமாக அமைந்து விட்டால், அச்ச்ச்றா…)

ஆனால், முத்தம் கொடுக்கத் தெரியுமா உங்களுக்கு…?
டென்ஷனாக வேண்டாம். கேள்விக்குக் காரணம் உண்டு!
ஏதோ வம்படிக்கு இழுத்துப் பிடித்து பசக் என்று கொடுப்பது… கச முசா என்று அவசரமாக திணித்துத் தொலைவது… எசகு பிசகாக குதறி வைப்பது… லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், இதெல்லாம் முத்தமில்லீங்கோ…!
கமல்ஹாசனோ, இம்ரன் ஹஸ்மியோ கதாநாயகிக்கு சட்டென்று இச்சொன்று தருவார்களே… அது போல் செய்வது பெரிய கம்ப (அல்லது, காம) சூத்திரெமல்லாம் இல்லீங்க… ரொம்ப சிம்பிள். இதற்கு கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள், பத்து. இந்த பத்து கட்டளைகளை பின்பற்றி கிஸ் அடித்துப் பாருங்கள். அப்புறம், உங்கள் காதல் அல்லது கல்யாண வாழ்க்கையில் எல்லா நாளும் பவுர்ணமி தான்!

உலகின் தலைசிறந்த மனைவிமார்கள் யார்.?

நியூயோர்க்கின் டைம்ஸ் பத்திரிக்கை மிச்செல் ஒபாமா மற்றும் சாரா பாலின் ஆகியோரின் கருத்துக்கள் அடங்கிய உலகின் தலைசிறந்த 10 வரலாற்று மனைவிகளின் பட்டியலை வெளியிட்டது.கணவரின் வளர்ச்சி, போராட்டம் ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருந்ததுடன் சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட மனைவிகளின் பட்டியலில் அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்க குடியரசு தலைவர் ஜான் மெக்கைனின் மனைவி சாரா பாலின் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இதில் 1857ம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய ஜான்சியின் ராணி லக்ஷ்மிபாய் பெயரும் இடம்பெற்றுள்ளது.மேலும் எகிப்திய முன்னாள் ராணி கிளியோபாட்ரா, டைகர்வுட்ஸ் முன்னாள் மனைவி எலின் நார்டிகரன், ஸ்பெயின் ராணி இசபெல்லா உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற பெண்மணிகளின் பெயர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Thursday, 5 January 2017

இவன் மீது ஒரு மையல்

எப்போதும் போலவே நான் ரசித்த பாடல்களை திரும்ப திரும்ப கேட்பதுண்டு.அன்றும்  அதே போல தூரத்து உறவு ஒன்று எங்கள் வீட்டுக்கு வந்ததும் காதில் மாட்டியிருந்த வோலக்மேன் ( walk-man ) கழட்டி டீவி மேசையில் வைத்துவிட்டு பெற்றோருடன் கதை பேசிக்கொண்டிருந்த நேரம்,
புதிதா ஏதோ ஒன்றைப்பார்த்த சந்தோசம் அதை ஒருதடவையாவது காதில் மாட்டிப்பார்க்க தோன்றியது.
மிட்டாய்க்கு ஏங்கிய குழந்தை போல அந்த நேரத்திற்காக காத்திருந்த போது பயத்தை விட்டு அந்த பெயர் தெரியா பொருளை கையில் பக்குவமாய் எடுத்து மெல்ல காதருகில் யாரும் பார்த்து விடக்கூடாதென்று கண்களை அலைபாய விட்டபடி காதில் மாட்டிய தருணம் அது !
பாடல் முடியும் தருணம் ஏதோ சாதித்து விட்டதான ஒரு மனநிலை , தூரத்தில் நின்ற என் அம்மாவின் பார்வையில் ஒரு கண்டிப்பு அது !
"ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா"அந்த ஐந்து நிமிடங்களும் எனக்கானது அது அவன் இசைக்கானது.
பின் ஒவ்வொருநாளும் ஏதோ ஒரு பாடலையாவது கேட்டு விட வேண்டும் என இசைத்தட்டில் பிரதியெடுத்த பாடலை சத்தமாம கேட்பதும் என்றாவது ஒரு நாள் ஏனோ என்னை விட யாரும் இசையை ரசிக்க மாட்டார்கள் என்று வீட்டின் உள்ளே மட்டும் மெதுவாக இழையோடும் சத்தத்தில் அவன் பாடலை கேட்பதுமாக இருந்தது.
இரு பூக்கள் கிளை மேலே ( Dilse ) , சின்னச்சின்ன ஆசை , பச்சைநிறமே பச்சை நிறமே , இனனும் எத்தனையோ பாடல்களை ஆயிரம் தடவைகள் கேட்டிருப்பேன்.
அதுவும் இவனின் டொரன்டோ & தூபாய் நேரடி இசைநிகழ்சிகளின் CD களை திரும்பத்திரும்ப போட்டுப்பார்த்ததும் நண்பர்கள் கேட்டபோது கொடுக்காமல் காரணம் சொல்வதுமான ஒரு குழந்தைதனத்தை என்மீது இவன் இசை மூலம் ஏவி இருந்தான்.
எல்லோரும் எதிர் பார்த்து போல இருகைகளில் உலகம் கொண்டாடும் அந்த ஆஸ்கார் விருதுகளை ஏந்தியபோது நமக்கான இந்த தமிழனுக்கான "ஒரு தெய்வம் தந்த பூ" இவன் !
Happy Birthday Ar Rahman

மகேந்திர சிங் தோனி...!

Captain MSD மகேந்திர சிங் தோனி,உலக உதடுகள் ஒட்டுமொத்தமாய் உச்சரிக்கும் ஒரு ஆச்சரியப் பெயர் .இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் பணம் புகழ் வளர்ச்சி எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் தான் காரணமென சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் எத்தனை வெற்றிகள் காண்பித்தாலும் புரியப் போவதில்லை...
ஆடுகளத்தின் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் அப்படி ஒரு அசாத்திய மனிதனை யாராலும் பார்க்க முடியாது. எப்போதும் கூல்...!!!
தன் அணியின் வீரர்களை ஒரு பொழுதும் விட்டுக் கொடுக்காமல், வெற்றி வந்தால் அவர்கள் கைகளில் கொடுத்துவிட்டு, தோல்வி வந்தால் தன் தோள்களில் ஏந்திக்கொள்ளும் பக்குவத்தை எந்த தலைவனிடம் பார்த்திருக்கிறீர்கள்?
தோல்வியின் கைகள் கட்டியணைக்க காத்திருக்கும் காட்சிகள் கண்முன்னே தெரிந்தாலும், விடாமுயற்சியால் வெற்றியின் விரல்களைப் பிடித்து இழுத்து வரும் அந்த போராட்ட குணத்தை எந்த தலைவன் காட்டியிருக்கிறான் ...?
ஆட்டம் கைவிட்டுப்போகும் நிலைமையை உணரும் நேரத்தில் பொசுக்கென ஆட்களை இடம் மாற்றி வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் தந்திரத்தை யார் சொல்லியிருக்கிறார்கள்...?

Wednesday, 4 January 2017

ஆயிரத்தில் ஒருவர் சச்சின் தெண்டுல்கர்!தோன்றுபவரெல்லாம் புகழோடு தோன்றுவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்குதான் புகழும் பணமும் வந்து சேரும். அவ்வாறு ஆயிரத்தில் ஒருவர்தான் சச்சின் தெண்டுல்கர். 1989ம் ஆண்டு தன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி, 20 ஆண்டுகள் ஆகியும் ஆட்டம் காணாமல் ஸ்டெடியாக ஆடி வருகிறார் இந்த கிரிக்கெட் சூறாவளி!

1973ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சச்சின் தெண்டுல்கர். அவரது தந்தை ரமேஷ் தெண்டுல்கர் ஒரு மராத்தி நாவலாசிரியர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சச்சினுக்கு கிரிக்கெட்டில் அலாதி பிரியம். தாம்தூம் என ஆடி அடிக்கடி அக்கம்பக்கத்து கண்ணாடி ஜன்னல்களை பதம் பார்த்து விடுவாராம் சச்சின். சச்சின் தெண்டுல்கர், ஆரம்பக் காலத்தில், வேகப் பந்து வீச்சாளர் ஆக ஆசைப் பட்டாராம். இதற்காக சென்னை எம்.ஆர்.எஃப் ஃபவுண்டேஷனில் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது, அவரது பயிற்சியாளர் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லீ (Dennis lilee). சச்சின் தெண்டுல்கரின் பந்து வீச்சு, லில்லீயைக் கவரவில்லை. 'நீ ஏன் பேட்டிங்ல கவனம் செலுத்தக் கூடாது?' என அறிவுறித்தியுள்ளார் லில்லீ. என்ன தீர்க்கதரிசனம். லில்லீயின் வாக்கு பலித்தது. அந்த நாள் ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது.