Welcome to our site.!!

Monday, 19 November 2012

ஒரு போராளியின் தமிழ் உணர்வின் மதிப்பு 5000 பவுண்சுகள் !

உணர்வுகள் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதிலும் ஒரு விடுதலைப் போராளிகளின்  உணர்வுகள் மிகவும் ஆழமானவை உண்மையானவை.  இந்த பதிவு தமிழீழத்தில் இருந்து லண்டனுக்கு வருகைதந்த இன்பன் என்னும் ஒரு விடுதலைப்போராளியை பற்றிய உண்மைக் கதை.

இன்பன் என்பவர் விடுதலைப்புலிகளின் விளையாடுத்துறையில் துணைப் பொறுப்பாளராகவும் வன்னியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றியவர்.இவர் கடந்த 2009 ஆம்  ஆண்டு கடைசி  யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து  பின்னர் எதோ
ஒரு முறையில் (அது அவருக்கே வெளிச்சம்)  லண்டன் மாநகருக்கு வந்து சேர்ந்துள்ளார்.

இவரை துரோகி எண்டு சொல்ல வரவில்லை  இவர்கள்
போரில் வீர மரணம் அடைந்து இருந்திருந்தால் நாங்கள் இவர்களை இதயத்தில் வைத்து கொண்டாடி இருப்போம்.இவர்கள் உயிருடன் வந்ததால் துரோகிகள் என்று சொல்லி முத்திரை குத்தவில்லை. ஆனால் தற்பொழுது இவர்களின் செயற்பாடுகள் இவர்களா  உண்மையான 
உணர்வான போராளிகள்??  என்று  நினைக்க தோன்றுகின்றது.


விடுதலைப்புலிகள் 2002 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின்
அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துடனான சமாதான பேச்சுவார்த்தையின் போது சில போராளிகளை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு அனுப்பி இருந்தது யாவரும் அறிந்த விடயம்.அதில் இன்பனும் அடங்கி இருந்தார். அந்த சமயத்தில் புலம் பெயர் நாடுகளில்  விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை  கவனித்துவந்த இப்பொழுதும் செயற்பட்டு  வருகின்ற தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழர் ஒழுங்கிணைப்பு குழுவின் அங்கத்துவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார்.

பேச்சுவார்த்தை முடிந்து வன்னி சென்று கூட பிரித்தானியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன்  தொடர்பில்
இருந்து வந்துள்ளார்.அதிலும் குறிப்பாக பிரித்தானியாவில்
இருக்கின்ற மிக முக்கிய செயற்பாட்டாளர்கள் ஆனா தனம்,பரா மாஸ்டர் மற்றும் கமல் ஆகியோருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இன்பன் லண்டன் மாநகருக்கு வந்து மன்னாரில்  செயற்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளின் கடற்புலி போராளியின் வீட்டில்
வசித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சில காலம் கழித்து இவர் பிரித்தானியாவில் தமிழர் ஒழுங்கிணைப்பு குழுவில்
செய்யட்பட்டு கொண்டிருக்கின்ற தனம்,பரா மாஸ்டர்,கமல் ,மாறன்
மற்றும் சிலருடன்  தொடர்புகளை மேற்கொண்டுள்ளார்.

அதன் பிறகு சில முக்கிய விடுதலை செயற்பட்டாளர்கள் அனைவரையும் இவர் சந்தித்து பேசி இருந்தார். தமது குடும்பத்தை விட்டு விட்டு தமிழீழ
செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்தது சில செயற்பாட்டாளர்களிடம் பணம் தர சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.அதிலும் குறிப்பாக
பரா மாஸ்டர்.தனம் ஆகியோருடன் தொடர்புகளை மேற்கொண்டு 5000 பவுண்டுகள் தரசொல்லி கட்டாயப்படுத்தியும் உள்ளார்.பிரித்தானியாவில் இருக்கின்ற இந்த இரு செயற்பாட்டாளர்களை தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்களது குடும்பத்தின் வறுமை. இருந்தும் கூட தனது
சுயநலத்துக்காக இன்பன் என்பவர் இவர்களிடம் பணம் தர சொல்லி கட்டாயப்படுத்தி மிரட்டியும் இருந்தவர்.

பணம் தந்தால்  மட்டுமே தமிழர் ஒழுங்கிணைப்பு குழுவுடன் செயற்படுவேன் இல்லை  என்றால் இலங்கை அரசாங்கத்துடன்
இணைந்து செயப்பட்டு வருகின்ற தலைமை செயலகம் என்று அமைப்புடன் இணைத்து விடுவேன் எண்டு கூட மிரட்டி பார்த்திருக்கிறார்.
அனால் உண்மையான செயற்பாட்டாளர்கள்  இவரின் மிரட்டல்களுக்கு பயப்படவில்லை.


அதன் பிறகு இவர் தலைமை செயலகம் என்று அமைப்புடன்தொடர்பை மேற்கொண்டு அவர்களுடன் தற்பொழுது இணைந்து தமிழார் ஒழுங்கிணைப்பு   குழுவிற்கு எதிராக செயற்பட்டு கொண்டிருக்குறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களாகிய நாங்கள் எமது தமிழீழ இலட்சியத்துக்காக தங்களில் உயிரை கொடுத்த உண்மையான போராளிகளை கொச்சைப்படுத்துகின்ற இவரை போன்ற பணத்தாசை பிடித்த போராளிகளை இனங்கண்டு இவர்கள் கூறும்
பொய் வார்த்தைகளுக்கு மயங்காது இவர்களுக்கு பின்னால்
செயற்படாது உண்மையாக மக்களுக்காக செயற்படுகின்ற உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு  மதிப்பளித்து அவர்களுடன் சேர்ந்து நாமும் செயற்படுவோம்.

தமிழீழம் என்பது தமிழ் மக்களால் அடைய முடியாத ஒரு இலக்கு என்று எதிரியானவன் கூறி திரிகின்றான்.தமிழீழம் என்பது ஒரு நீண்ட தூர இலக்கு அடைய முடியாத இலக்கு இல்லை அடிந்தே தீருவோம் ஒருநாளைக்கு.அந்த ஒருநாளை அடைய பத்து வருடங்கள் ஆகலாம் இல்லை  என்றால் 400 வருடங்களும் ஆகலாம்.எனவே மக்கள் ஒற்றுமையாக இருந்து மாவீரர்கள் காட்டிய அதே வழியில் நாங்களும் சென்று அந்த இலக்கை அடைவோம்.

No comments:

Post a Comment