Welcome to our site.!!

Saturday, 17 November 2012

மாவீரர் நாள் 2012 EXCEL !


ஒரு இனத்தின் அடிப்படி உரிமைகள் ஒரு வலிமை பொருந்திய வல்லாதிக்க சக்திகளால் ஒடுக்கப்படும் போது அல்லது மறுக்கப்படும் போது அடிப்படை உரிமைகள் மறுக்கபட்ட இனமானது  தனது உரிமைகளை பெறுவதற்காக அந்த வலிமை பொருந்திய சக்திகளிடம் ஜனநாயக ரீதியில் எதிர்க்கும் போது  ஒரு  ஜனநாயக புரட்சி ஏற்படுகின்றது.இந்த ஜனநாயக புரட்சியை வல்லாதிக்க சக்திகள் தங்களின் இரும்பு கரங்களாலும் ஆயுத பலத்தாலும் அடக்க முற்படும் போது  அது பிற்காலத்தில் ஆயுத போராட்டமாக வடிவம் எடுக்கிறது. இந்த போராட்ட வடிவமே  எமது தாயக மண்ணில் நடந்தது யாவரும் அறிந்தது.


ஒரு இனத்துக்காக மூன்று சகாப்பதம் போராடிய ஒரு விடுதலைப் போராளிகளின் ஆயுத போராட்டம் உலகத்தில் உள்ள பல வல்லாதிக்க நாடுகளின் உதவியுடன் 2009 ஆம் ஆண்டு முள்ளி வாய்க்கால் என்ற  இடத்தில் முடிவுக்கு வந்துள்ளது யாவரும் அறிந்தது.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும்  புலம் பெயர் நாடுகளில்வாழும் ஈழ தமிழர்கள் ஜனநாயக  ரீதியில் தமது உரிமைகளை வென்று எடுக்க பல போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அந்த மக்களுக்கு ஆதரவாக புலம்பெயர்நாடுகளில் செயற்படுகின்றதமிழ் அமைப்புகள் உதவி செய்கின்றன.

அதில் முக்கியமானது தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC)  என்பது குறிப்பிடத்தகது . தமிழர் ஒருங்கிணைப்பு குழு தேசிய தலைவரால் நேரடியாக அவரது வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட  இந்த அமைப்பு கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக புலம் பெயர் நாடுகளில் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்த அமைப்பில் வேலை செய்பவர்கள் பலரின் குடும்பங்கள்  இன்றும் வறுமையில் வாடுகின்றனர் பிள்ளைகள் படிப்பிற்கு  கூட பணம் கொடுக்க முடியாத நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.

எமது இனத்தின் விடியலுக்காக தமது உயிரை தியாகம் செய்த பல ஆயிரம் விடுதலை வேங்கைகளுக்கு அக வணக்கம் செலுத்தும் நாள் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி உலகம் எங்கும் வாழும் ஈழ தமிழர்களால் மிகவும் உணர்வுடன் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. புலம் பெயர் நாடுளில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு இருபது வருடங்களுக்கு மேலாக மாவீரர் நாளை மிகவும் உணர்வுடன் நடாத்தி கொண்டுவருகிறார்கள்.

ஆனால் கடந்த முறை புதிதாக வந்த இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும்  தலைமை செயலகம் என்ற ஒரு அமைப்பு மாவீரர்கள் நாளை முருகதாசன் திடலில் நடாத்தி மக்களை  திசை திருப்பி இருந்தனர்.இந்த முறையும் இவர்கள் மாவீரர்கள்நாளை அதே இடத்தில் 
நடத்த முடிவு செய்து விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்த புதிய அமைப்பினர் அனைவரும் மாவீரகள் நாளை  பணம் சம்பாதிக்கின்ற விழாவாகவே பார்க்கிறார்கள். இவர்களுக்கு
GTV என்கின்ற தனியார் TVயும் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பினர் கடந்த ஆண்டு வீதிகளில் திரியும் ரவுடிகளுக்கு பணத்தை கொடுத்து உண்மையான தமிழ் உணர்வாளர்களை மிரட்டியும் அடித்தும் வந்துள்ளனர்.

அதற்கு உதாரணமாக பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் உணர்வாளர் தனம் அவர்கள் மீதான தாக்குதலை குறிப்பிடலாம்.இந்த புதிய அமைப்பினர் இந்த ஆண்டு தங்களின் கொடுமையான  முகத்தை பிரான்ஸில் கேணல்  பரிதி அண்ணாவை படுகொலை கொலை செய்ததன் மூலம் மீண்டும் காட்டியுள்ளனர்.


இந்த குழப்பவாத அமைப்பின் தலைவராக செயற்பட்டு வரும் விநாயகம் என்றும் அறிவழகன் என்றும் தன்னை தானே அழைத்துவரும் கதிர்காமத்தம்பி வைரமூர்த்தி என்பவரை கேணல்  பரிதி அண்ணாவின் படுகொலை வழக்கில் பிரான்ஸ் நாட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருவது யாவரும் அறிந்தது.


புலிகள் வேஷம் போடும் நரிகள் முகம் வெகுவிரைவில் தமிழ் மக்களால் கிழிக்கப்படும்.பிரித்தானியாவில் மாவீரர்கள் நாள் ஒழுங்குகள் தமிழ்த்தேசிய நினை வேந்தர்கள் அகவத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது தமிழீழ மக்களாகிய நாங்கள் தேசிய தலைவரால் உருவாக்கபட்ட அமைப்பின் பக்கம் நின்று அவர்கள் நடத்தும் மாவீரர்கள் நிகழ்வுக்கு அனைவரும் சென்று எமது மாவீரர்களுக்கு அகவணக்கத்தை செலுத்தி எமது ஒன்றுமையை  மீண்டும் உலகிற்கு காட்டுவோம்.

பிரித்தானியாவில் மாவீரர் நாள் நடைபெறும் இடம்


EXCEL                                                          
1 ,WESTERN GATEWAY,
ROYAL VICTORIYA DOCK, 
LONDON. 
E16 1XL.
 
மேலதிக தொடர்புகளுக்கு

TEL-02033719313
www.tnrf.org.uk
e-mail :info@tnrf.org.uk

தமிழர்களின் தாகம்  தமிழீழ தாயகம் !

No comments:

Post a Comment