Welcome to our site.!!

Monday, 5 September 2011

துவரங்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 14 பேர் பலி.!

புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கோவில் பட்டியில் உள்ள பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தமிழ்நாடு அரசு நகரப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டியில் இருந்து மணப்பாறை சென்ற அந்தப் பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்ததால், விபத்து நடந்த இடத்திலேயே 3 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி.மேலும் நகரப் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment