Welcome to our site.!!

Wednesday, 31 August 2011

பிரித்தானியாவில் விஜய்?குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி .

பிரித்தானியாவில் தற்போது தோன்றியுள்ள குழுக்களும் அதன் செயல்பாடுகளும் பற்றி கொஞ்சம் பேசலாமா ? நீங்க ரெடியா ? நாங்களும் தான் .. வாங்க விடயத்துக்குப் போகலாம். லண்டனில இப்ப புதுசா முளைவிட்டுள்ள புதிய பிரச்சனை என்ன தெரியுமா, இங்க நடக்கும் விழா, நினைவு தினம் விளையாட்டுப்போட்டி இதை எல்லாத்தையும் யார் நடத்துவது எண்டுதான். 15 தொடக்கம் 20 வருஷமா நடக்கும் தமிழீழம்சார் எழுச்சி நிகழ்வுகளைக் கூட இப்ப புதுசா ஒரு கோஷ்டி தாம்தான் நடத்தவேண்டும் என்று சொல்வதும், தாங்கள் நடத்தாமல் பழைய செயல்பாட்டாளர்கள் நடத்தும் நிகழ்வுகளைக் குறைகூறி மின்னஞ்சல் அனுப்புவதும் இல்லை தமக்குச் சார்பான இணையங்களில் அதனைப் பிரச்சுரிப்பதும் பெஃஷன் ஆகிப்போச்சு சாமி !


சுமார் 20 வருஷமா லண்டனில் செயல்பட்டு வரும் செயல்பாட்டாளர்கள் நடத்தும் தமிழர் விளையாட்டு விழாவைப் பற்றியும் அங்கே ஏற்றப்பட்ட தேசியகொடி பற்றியும் சமீபகாலமா சில விஷமிகள் புரளியைக் கிழப்பிவிட்டுக்கொண்டு உள்ளனர். அதற்கு (ஆங்கிலத்தில்) 3 எழுத்துக்(GTV) கொண்ட TV  யும் களம் அமைத்துக் கொடுக்க, அதில் வெள்ளையும் சொள்ளையுமாகச் சென்று 2பேர் ஏறி விளையாட்டு விழாவில் கொடி ஏற்றிய விதம் படு பிழை என்று சொல்லியுள்ளனர். அரசியல் என்றால் என்ன தேசியகொடிக்கும் விடுதலைப் புலிகளின் கொடிக்கும் என்ன வித்தியாசம் என்று சற்றும் தெரியாத இவர்களை மேடை ஏற்றி வேடிக்கை பார்க்கிறது இந்த 3 எழுத்து(GTV) TV. இல்லை இல்லை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஊட்டவே இவர்கள் முனைகிறார்கள் என்பது தான் சரி.

அதாவது சமீபத்தில் லண்டனில் நடந்த 16 வது விளையாட்டு விழாவில் முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தேசிய கொடியை ஏற்றும்போது சரியான முறைப்பாட்டைக் கடைப்பிடிக்கவில்லையாம். கீழே நீங்கள் பார்ப்பது தான் சம்பந்தப்பட்ட புகைப்படம்.



தேசிய கொடி வெள்ளிக் கம்பத்தில் இருக்கவேண்டும் அது மடிப்புக் கலையாது தட்டில் வைக்கப்பட்ட பின்னர் ஏற்றப்படவேண்டும் என்று எல்லாம் எழுதி இறுதியில் இவ்வாறு பிழை நடந்தமைக்கு ஏற்பாட்டாளர்களே காரணம் என்று ஒரு கோஷ்டி தொடர்ந்து மின்னஞ்சலை அனுப்பியும் தமக்கு ஆதரவான இணையங்களில் இச் செய்தியை பிரசுரித்தும் வருகிறது. விளையாட்டு விழாவில் தேசியகொடியை ஏற்றும்போது அவ்விடத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த பரேமேஸ்வரனும் உடன் இருந்தார். தேசியகொடிக்கு மிவும் உயர்வான மரியாதை கொடுத்து அதனை ஏற்றிவைத்தார் பரமேஸ்வரனும் எஸ்.ஜெயானந்தமூர்த்தியும் என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் இக் கோஷ்டியின் விதண்டாவாதங்கள் முடிந்ததாக இல்லை.



23ம் புலிகேசி என்னும் படத்தில் மன்னனாக நடித்த வடிவேலு ஜாதிச் சண்டைக்கு ஒரு மைதானத்தையே திறந்துவைத்து அதனை ஊக்குவித்தான். அதுபோல நீண்டுசெல்கிறது இந்தக் கோஷ்டியின் வியாக்கியானம். இதனைப் பின்னே நின்று இயக்குவது யார் என்று ஆராய்ந்தால் அதில் நாடுகடந்த நபர்களும், தாம் தான் இனிப் பிரித்தானியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறோம் என்று கூறும் தறு(தலை) கோஷ்டியுமே இதன் பின்னணியில் உள்ளனர். அதனால் நாடுகடந்த அரசின் பிரதமர் மாண்புமிகு திரு ருத்திரகுமாரன் ஐயா அவர்கள் தேசிய கொடியை எவ்வாறு ஏற்றினார் ? இல்லை அவர் சரியாகத் தான் ஏற்றினாரா ? (என்று நாம் கேட்கவில்லை) மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் அதனை இங்கே எழுதி இருக்கிறோம் அவ்வளவுதான் !



மாண்புமிகு திரு ருத்திரகுமாரன் ஐயா அவர்கள் தேசியகொடியை பிழையாக ஏற்றும்போது ஏன் எவரும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டு விழாவில் தேசியகொடி முறைகேடாக ஏற்றப்பட்டிருக்கிறது என்று குரைக்கும் சிலரைப் பார்த்து தமிழீழ மக்கள் கேட்கிறார்கள். இக் கேள்வியில் நியாயம் உள்ளது. அதனால் அதிர்வு இதனைப் பிரசுரிக்கிறது அவ்வளவுதான். விளையாட்டு விழாவில் தேசியகொடியை முறைகேடாக ஏற்றினர் என வாய் கிழியக் கத்தும் கணவான்மார்களே இதற்கும் பக்கம் பக்கமாக ஏதாவது விளக்கம் சொல்லக்கூடாதா ?

நன்றி அதிர்வு இணையத்தளம்.இந்த செய்தியை வெளியிட்டமைக்கு.





குறிப்பு-பிரித்தானியாவில் கடந்த பல வருடங்களாக செயற்பட்டு கொண்டிருக்கும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் நடாத்திய விளையாட்டு நிகழ்வில் தேசிய கொடி ஏற்றும் போது சரியான முறையில் அதை ஏற்றவில்லை என்றும் அந்த விளையாட்டு போட்டிக்கு மக்கள் அதிகம் செல்லவில்லை என்றும் GTVஎன்ற தமிழ் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய் என்ற ஒருவர் .குறை கூறியுள்ளார்.யார் விஜய்? என்ற கேள்வி எல்லாரது மனதில் எழும் காரணம் இவர் யார் என்று மக்கள் பலருக்கு தெரியாது.விஜய் என்பவர் இலங்கை அரசின் கைக்கூலிகளில் ஒருவர்.பிரித்தானியாவில் நடைபெற்ற பல தேசிய நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்களை வீடியோ மற்றும் புகைப்படம் பிடித்து இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினருக்கு பல வருடங்களாக கொடுத்து வந்தவர்.தற்பொழுதும் அந்த வேலையை தான் செய்து வருகிறார்.

இன்று இலங்கை அரசாங்கத்துக்கு விலை போன GTVயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தன்னை ஒரு தமிழ் தேசிய உணர்வாளன் என்றும் இனி வரும் காலங்களில் பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் ஈழ நிகழ்வுகள் அனைத்தும் தாங்கள் தான் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.அந்த நிகழ்வில் அவர் சொன்னது அனைத்தும் பொய் அவர் ஒரு கட்டத்தில் சொன்னார் தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஜெயராஜ் மற்றும் வசந்தன் தங்களுடன் இணைந்து செயற்பட போகிறார்கள் என்று ஆனால் உண்மையில் அப்படி நடைபெறவில்லை அவர்கள் இந்த புதிய குழப்பவாதிகளுடன் இணையப்போவதும் இல்லை..இவர்கள் மக்கள் நம்பும் படியாக பல பொய்களை சொல்லி வருகிறார்கள்.அதற்கு GTV யும் உதவி செய்து வருகிறது

.பலவருடங்களாக தங்களின் குடும்பங்களை விட்டு விட்டு ஈழத்தில் நடந்த விடுதலை போருக்கு உழைத்த பல செயற்பாட்டளர்கள் என்று பிரித்தானியாவில் சொந்த வீடுகள் இல்லாமல் வறுமை கோட்டில் வசித்து வருகின்றனர்.ஆனால் இந்த புதிய குழப்பவாதிகளுக்கு பல கடைகளும் பல வீடுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய குழப்பவாதிகளின் அடுத்த கட்ட குழப்பல் நடவடிக்கை மாவீரர் தின நிகழ்வு தான் இந்த நிகழ்வை குழப்ப இப்பவே இவர்கள் சதி செய்து வருகின்றனர்.பல மாதங்களாக தெரியாத கேள்விக்கான விடை எப்பொழுது மக்கள் அறிந்திருப்பார்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனம் என்ற பிரித்தானியாவில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் கொலை செய்யும் நோக்கத்துடன் அவரின் விட்டுக்கு முன்னால் வைத்து இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட செய்தி பலரும் அறிந்திருப்பார்கள்.ஆனால் தாக்கியவர்கள் யார் என்று இதுவரைக்கும் தெரியாது.தாக்கியவர்கள் வேற யாரும் இல்லை.இந்த புதிய குழப்பவாதிகள் தான்.மக்கள் இனி வரும் காலங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு புதிய குழப்பவாதிகளுக்கு ஒரு முடிவு கட்டி பழைய தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களின் கரங்களுக்கு வலு சேருங்கள்.நன்றி.

No comments:

Post a Comment