Welcome to our site.!!

Sunday, 28 August 2011

வீர தமிழ் மகள் செங்கொடி எமக்கு உணர்த்திய பாடம்.


ராஜீவ் காந்தி கொலையில் சோடிக்கப்பட்ட பொய் குற்றவாளிகளாக்கபட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார்.
உலக நாடுகளுக்கு அகிம்சையை போதித்த இந்தியாவின் காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.
இன்று மாலை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் செங்கொடி என்ற வீர மகள் தன்னைத் தானே தீயில் கொழுத்தி உள்ளார் எனினும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி.அந்த கடிதம் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் தேசத்தில் வாழும் ஈழ தமிழர்களில் பலர் ஈழப்போராட்டத்தை காரணம் காட்டி பல நாடுகளில் குடியுரிமை பெற்று விட்டு இன்று தாங்கள் உண்டு தங்கள் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து வரும் நிலையில் உலகத்தின் எங்கயோ ஒரு மூலையில் வசிக்கும் தமிழக உறவுகள் தொடர்ந்தும் ஈழ தமிழ் மக்களுக்காக எங்களுக்காக போராடி வருகின்றனர்.புலம் பெயர் தேசங்களில் வசிக்கும் ஈழ சுயநல தமிழர்கள் தமிழக உறவுகளின் உணர்வுகளை பார்த்தாவது திருந்துவார்காளா? என்பது விடை தெரியா கேள்வியே.

கோவில் திருவிழாக்கள் என்றால் வேலைகளுக்கு கூட விடுமுறை அளித்துவிட்டு குடும்பத்துடன் தரிசனம் செய்யும் நீங்கள் ஒரு போராளியின் நினைவு தினம் அல்லது ஈழ மக்களுக்கு சார்பாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பல புலம் பெயர் தேசத்தில் உள்ள அமைப்புகளிளால் ஒழுங்கு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு,நிகழ்வுகளுக்கு செல்வது இல்லை.ஏன் செல்லவில்லை என்று கேட்டால் அடுத்த மாதம் விடுமுறைக்கு இலங்கை செல்ல இருக்கின்றோம் என்று கூறுகிறார்கள்.

புலம் பெயர் நாடுகளில் குடியுரிமை யை பெற்றுக்கொள்ள மட்டும் ஈழ போரட்டத்தை சாக்காக வைத்து குடியுரிமை எடுக்கும் நீங்கள் உங்கள் மண்ணின் விடுதலைக்காக உங்களின் விடியலுக்காக போராடிய மாவீரர்களை மனதில் வைத்து கொள்ளவது இல்லை.சுயநலம் மிக்க ஈழ தமிழ் இனமே உங்கள் மண்ணின் விடுதலைக்காக போராடி வித்தாகிய மாவீரர்களை மறந்து விடாதீர்கள்.நீங்கள் கண்களை மூடி நித்திரை கொள்வது போல நடித்தாலும் எமது விடியலுக்காக தொடர்ந்து போராட தமிழக உறவுகள் இருக்கிறார்கள் என்பதை மறக்காதே. மீண்டும் மீண்டு அவர்கள் அதை நிரூபித்து கொண்டிருக்கின்றனர்.
 

No comments:

Post a Comment