Welcome to our site.!!

Wednesday, 31 August 2011

பிரித்தானியாவில் விஜய்?குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி .

பிரித்தானியாவில் தற்போது தோன்றியுள்ள குழுக்களும் அதன் செயல்பாடுகளும் பற்றி கொஞ்சம் பேசலாமா ? நீங்க ரெடியா ? நாங்களும் தான் .. வாங்க விடயத்துக்குப் போகலாம். லண்டனில இப்ப புதுசா முளைவிட்டுள்ள புதிய பிரச்சனை என்ன தெரியுமா, இங்க நடக்கும் விழா, நினைவு தினம் விளையாட்டுப்போட்டி இதை எல்லாத்தையும் யார் நடத்துவது எண்டுதான். 15 தொடக்கம் 20 வருஷமா நடக்கும் தமிழீழம்சார் எழுச்சி நிகழ்வுகளைக் கூட இப்ப புதுசா ஒரு கோஷ்டி தாம்தான் நடத்தவேண்டும் என்று சொல்வதும், தாங்கள் நடத்தாமல் பழைய செயல்பாட்டாளர்கள் நடத்தும் நிகழ்வுகளைக் குறைகூறி மின்னஞ்சல் அனுப்புவதும் இல்லை தமக்குச் சார்பான இணையங்களில் அதனைப் பிரச்சுரிப்பதும் பெஃஷன் ஆகிப்போச்சு சாமி !


Monday, 29 August 2011

தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.!

சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோருக்கான தூக்கு தண்டனை எட்டு வாரங்களிட்கு ஒத்தி வைக்கப்படதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பூமியில் விழுந்த அரிய விண்கல்.!

( வீடியோ இணைப்பு)  
பெரு நாட்டில் ஒரு மலைப்பிரதேசக் கிராமம் ஒன்றில் விண் கல் வீழ்வதை ஒருவர் வீடியோவில் பிடித்துள்ளார்.மிகுந்த பிரகாசத்துடன் எரிந்தவண்ணம் வந்து பூமியோடு மோதிய அந்த விண்கல்லினால் தற்போது காட்டுத் தீ மூண்டுள்ளதாக அறியப்படுகிறது.

Sunday, 28 August 2011

வீர தமிழ் மகள் செங்கொடி எமக்கு உணர்த்திய பாடம்.


ராஜீவ் காந்தி கொலையில் சோடிக்கப்பட்ட பொய் குற்றவாளிகளாக்கபட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார்.
உலக நாடுகளுக்கு அகிம்சையை போதித்த இந்தியாவின் காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.

Saturday, 27 August 2011

கண்ணாடி குவளையில் சங்கீதம்!

கண்ணாடி குவளையில்(Glass) தண்ணீர் குடித்து பார்த்திருக்கின்றோம். பீர்,வைன் அடித்தும் 
பார்த்திருக்கின்றோம்.ஆனால் கண்ணாடி குவளையில் இருந்து இனிமையான 
சங்கீதம் மீட்டி பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. 
இந்த வீடியோ வை பாருங்கள்.


Wednesday, 24 August 2011

பெண்ணை கர்ப்பமாக்கினால் 1மில்லியன்!

மேலத்தேய நாடுகளில் பெண்கள் தங்கள் கற்பை ஏலம் விடுவதென்பது சர்வ சாதாரண ஒரு விடயமாகிவிட்டது. அது போன்று அண்மையில் சீனா நாட்டைச்சேர்ந்த இளம் அழகிய யுவதி ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை விடுத்துள்ளார். 28 வயது நிரம்பிய அழகிய பெண்தான் கியான் யாவ் .

Tuesday, 23 August 2011

உயிரணுக்களை அழிக்கும் மடிக்கணணி!

ஆடம் ஆஸ்பார்ன் (Adam Osborne) என்பவரால் 1981 ஆம் ஆண்டு மடிக் கணினி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மிக கனமாயிருந்து, தற்பொழுது ஒன்றிலிருந்து 1.50 கிலோவிற்குள் வெவ்வேறு மாடல்களில் கிடைக்கிறது. இன்றைய கணினி யுகத்தில் அலுவலகம் செல்வோரும், கல்லூரி மாணவ மாணவிகளும், வியாபார இடங்களிலும் ஆண்களாலும், பெண்களாலும் கணினியும், மடிக் கணினியும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களும், பெண்களும் மடிக் கணினியை மடியில் வைத்து தொடர்ந்து பல மணி நேரம், பல நாட்கள் பயன்படுத்துவதால் அவர்களையறியாமல் பாதிக்கப்படுகின்றனர்.


ஜேர்மனிய உதைபந்தாட்ட அணிவகுப்பில் புலிக் கொடி.!


தமிழீழ தேசியக்கொடி ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Thursday, 18 August 2011

மணிரத்தினம் உருவாக்கும் தமிழக மீனவன் பிரச்சினை.!


சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் பாடுகளை திரைப்படமாக எழுத்தாளர் ஜெயமோகன் எழுத மணிரத்னம் இயக்குகிறார்.தமழக மீனவர்கள் பிரச்சனையை வைத்தே இப்படம் உருவாகின்றது.

Wednesday, 17 August 2011

வேலாயுதம் Trailer

ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் நடிகர் விஜய் இன் நடிப்பில் ஆஸ்கார் ரவிசந்திரனின் தயாரிப்பில் மிக விரைவில் திரைக்கு வர இருக்கும்
வேலாயுதம் படத்தின் Trailer
.

Tuesday, 16 August 2011

ஓரினச்சேர்க்கை பற்றி ஒரு விரிவான விளக்கம்!

ஆண், ஆணுடன் அல்லது பெண் பெண்ணுடன் உடல்உறவு வைத்துக் கொள்வது தான் ஓரினச்சேர்க்கை என்பர். இவர்களை ஆங்கிலததில் “கே” (Gay) என்பர். பெண் குணம் கொண்ட நபர்களும் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக மாற்றி வாழும் “அலிகளும்” ஓரினச்சேர்கையில் ஈடுபடு கின்றனர். “அலிகள்” என்று சொல்லும் போது பலருக்கு ஆண்குறியும் (Penis) விரைப்பையும் (Scrotum) இருக்கும். தன் வாழ்க்கையை பெண்மாதிரி பாவித்துக் கொண்டு உடல்உறவுக்கு அழைத்து, ஆணிடம் தன் ஆசனவாய் வழியே தான் உடல்உறவு வைத்துக் கொள்கின்றனர்.

Sunday, 14 August 2011

விடுதலைப்புலிகள் வீழ்ந்தார்களா?ஒரு உண்மை ரிப்போர்ட்.

“தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும் அரசியல் அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. வன்னி மீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்துலகத் தயார்ப்படுத்தல்களையும் செய்து வருகிறது என்பதுதான் உண்மையாகும்.

சிங்கள அரசின் இந்தப் பெரும்போரைத் துணிவுடன் எதிர் கொள்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை.

“....வரப்போகும் போர்க்காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர் கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்கத் தயாராவோம்”.

Wednesday, 10 August 2011

லண்டன் கலவரத்தில் பெண்ணின் துணிகரம்.!

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் பல இடங்களிலும் தொடர்கின்றது கலவரம்.எரிந்து கொண்டிருந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்த ஒரு பெண்ணின் துணிகரம் ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து உள்ளது. புகைப்படங்களை கார்டியன், த லண்டன் ரைம்ஸ், த சன், த டெய்லி ரெலிகிராஃப், த டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகள் நேற்று முன்பக்கத்தில் பிரசுரித்து இருந்தன.இணைய உலகிலும் இப்புகைப்படங்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.ஆயினும் அப்பெண் யார்? தப்பிப் பிழைத்தாரா? போன்ற தகவல்களை நெருக்கடிச் சூழல் காரணமாக உறுதிப்படுத்த முடியாமல் போய் விட்டது.

Tuesday, 9 August 2011

ஹெட்லைன் ருடே வெளியிட்ட அவலம் நிறைந்த வாக்குமூலங்கள்.!

ஹெட்லைன் ருடே தொலைக்காட்சி, இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான வாக்குமூலங்கள் அடங்கிய புதிய காணொளி ஒன்றை செவ்வாய்க்கிழமை இரவு இந்திய நேரப்படி மாலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரை வெளியிட்டுள்ளது.இத் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நேரடியாக கிளிநொச்சி சென்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார்.
மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டுள்ள சில காணொளி ஆதாரங்கள் இப் பதிவில் இடம்பெற்றுள்ளன. வீடியோ காண இங்கே கிளிக் செய்யவும்.
 

நித்தியானந்தாவை கலாய்த்த நடிகர்கள்.!

நித்தியானந்தா சொல்லும் வார்த்தைகளும், அதுக்கு கவுண்டர் செந்தில், சந்தானம், விவேக் இருந்தா எப்படி பதில் சொல்லி இருப்பாங்க எண்டு ஒரு நகைச்சுவைக் காட்சி.!:)

Wednesday, 3 August 2011

அரியவகை நாக பாம்பு.!

பருத்தித்துறை வியாபாரி மூலையில் ராவலை என்ற இடத்தில் அரியவகை வெள்ளை நிற நாகம் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசவாசி ஒருவரின் கோழிக் கூட்டினுள் இருந்து இந்த நாகம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளை நிற நாகத்தினை, பால் இராஜ நாகம் அல்லது குழி நாகம் என்றும் அழைப்பர்.
இதனை வனத்துறையினர் கொண்டு சென்று உரிய வகையில் பாதுகாக்கும் படி வனத்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
பிரதேசவாசியின் வீட்டில் பிடிக்கப்பட்ட நாகம் பின்னதாக பருத்தித்துறை தபால் நிலையத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இவ் அரியவகை நாகத்தினை அதிகளவான பொது மக்கள் வியப்புடன் சென்று பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வெள்ளைப்பாம்பு கொழும்பு மிருகக் காட்சிசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.