Welcome to our site.!!

Sunday, 31 July 2011

தாயகத்தில் அன்று நடந்தது புலத்தில் இன்று நடப்பது!

அன்று-காதலி யன்னலை(Window)திறந்து வைத்துக்கொண்டு காதலன் வரவை எதிர்பார்த்திருந்தாள்.
இன்று-காதலன் யன்னலை(Window) திறந்து விட்டு காதலியின் தரவை கணனியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

அன்று-குடிசையில் வாழ்ந்த போது மாளிகை கிடைத்தால் நிம்மதி கிடைக்கும் என ஏங்கினோம்.
இன்று-மாளிகை கிடைத்துவிட்டது.ஆனால் நிம்மதிக்கு குடிசைக்கு(cottage) செல்லவேண்டியுள்ளது.


அன்று-நீண்ட கூந்தலைக் கொண்ட பெண்களை கண்டு ஆண்கள் காதல் கொண்டனர்.
இன்று-நீண்ட கூந்தல் கொண்ட ஆண்களைக் கண்டு பெண்கள் காதல் கொள்கிறார்கள்.

அன்று-வசதியற்றவர்கள் கிழிந்த உடைகளை அணிந்தார்கள்.
இன்று-வசதி படைத்தவர்கள் கிழித்த உடைகளை அணிகிறார்கள்.

அன்று-பிள்ளைகளை வளர்ப்பதுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெற்றோர் தாமே வீட்டில் வைத்து பராமரித்தனர்.
அப்படி வளர்ந்த பிள்ளைகள் வயதான பெற்றோர்களை தங்களுடன் வைத்து பராமரித்தனர்./
இன்று-பிள்ளைகளை சிறுவர் காப்பகத்தில் விட்டு வளர்த்த பெற்றோரை அவர்கள் வயதாகும் போது பிள்ளைகள் முதியோர் காப்பகத்தில் விட்டு விடுகின்றனர்.

அன்று-முகூர்த்த நேரத்தில் தாலியைக் கட்டினார்கள்.
இன்று-தாலியை கட்டின நேரத்தை குகூர்த்த நேரம் என்கிறார்கள்.

அன்று-காதலில் தோல்வி என்றால் தான் காதலன் தாடி வளர்ப்பான்.
இன்று-காதலன் தாடியுடன் தான் காதலிக்க தொடங்குகின்றான்.அவளவு தீர்க்கதரிசனம்.

அன்று-பிள்ளைகள் இடுப்பிலை நாய் கயிற்றில்.
இன்று-இங்கு நாய் இடுப்பிலை பிள்ளை கயிற்றில்.

அன்று-பிள்ளைகள் கைசெலவுக்கு பெற்றோரிடம் கை ஏந்தினார்கள்.
இன்று-பெற்றோர் கைசெலவுக்கு பிள்ளைகளிடம் கை ஏந்தி நிக்குறார்கள்.

அன்று-அங்கெ தாள் தாந்தையரின் காணி எல்லை சண்டைக்கு(Civil) பிள்ளைகள் சட்டத்தரணிகளுக்கு பணத்தை கொட்டினார்கள்.
இன்று-எங்கு பிள்ளைகளின் கொலைகளுக்குCriminal)( தாய் தந்தையர் சட்டத்தரணிகளுக்கு பணத்தை இறைக்கிறார்கள்.

2 comments: