Welcome to our site.!!

Saturday, 2 July 2011

புற்று நோயா.?இனிமேல் சிகரெட் பிடியுங்க.!

புகைபிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் வகையில் இ-சிகரெட் விற்பனைக்கு வந்துள்ளது.குர்கானை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள "ஜாய் 510" என்ற அதன் விலை 1,650 ரூபாய். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட இ-சிகரெட் இந்தியாவில் இப்போது தான் அறிமுகமாகி உள்ளது.

குர்கானை சேர்ந்த இணையதள நிறுவனமான விண்ட்பைட் டாட் இன் இதை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து "ஜாய் 510" என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
பவுண்டன் பேனா வடிவில் இருக்கும் அதில் அழுத்தி இங்க் நிரப்ப இருக்கும் பகுதியும் உண்டு. பேனாவில் இங்க், இ-சிகரெட்டில் நிகோடின் திரவம். இந்த நிகோடின்தான் சிகரெட் பிடிப்பவர்களை திருப்திபடுத்துகிறது. திரவத்தை சூடாக்க பற்றரி முனையில் எல்இடி விளக்கு. "ஜாய் 510" சிகரெட்டின் ஒரு விசையை அழுத்தினால் பற்றரி இயங்கி திரவம் சூடாகி புகை வரும்.
சிகரெட் முனையில் தீ நாக்கு போலவே விளக்கு எரியும். பிறகு வாயில் வைத்து இழுத்து வட்ட வட்டமாக புகை விடலாம். அந்த புகையால் யாருக்கும் பகையில்லை.
இந்த இ-சிகரெட் சிலமுறை பயன்படுத்தி தூக்கி எறிவது ரூ.300, நீண்ட காலம் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது ரூ.1,650 என 2 விலையில் கிடைக்கிறது

1 comment: