Welcome to our site.!!

Friday, 24 June 2011

SKYPE ல் இருந்து FACE BOOK நண்பர்களுடன் அரட்டை செய்ய!


ஸ்கைப் நிறுவனம் மிக அண்மையில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பின் முக்கியம் உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை( face book ) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும் .
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் ஆன்லைன் இல் உள்ள நண்பர்களுடன் அரட்டை செய்யலாம். இதற்கு வசதியாக நண்பர்களின் ஆன்லைன் வருகையை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.

(இந்தப் படத்தில் அம்புக்குறியினால் காட்டப்பட்டுள்ளதை கிளிக் செய்தால் ஸ்கைப் வசதியினை அடையலாம் )
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் நண்பர்கள் பகிர்த்துகொண்ட தகவல்களை பார்க்க முடிவதுடன் அவற்றுக்கு பதில் (கமெண்ட்)அனுப்பவும் . லைக் ( like )பண்ணவும் முடியும் .
இந்த வசதிகளை பெற ஸ்கைப் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் ஸ்கைப் கணக்கினை திறந்துகொள்க இப்போது வலது பக்க மூலையில் FACE BOOK பட்டன் தரப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து உங்கள் FACE BOOK கணக்கினை அடைவதற்கான முகவரி மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் FACE BOOK தகவல்களை சென்றடைய அனுமதி கோரப்படும் நீங்கள் அனுமதி வழங்குவதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு FACE BOOK பக்கத்தினை அடைய முடியும் . 
மென்பொருளை டவுன்லோட்  செய்ய இதை கிளிக் செய்க 


http://www.skype.com/intl/en/get-skype/on-your-computer/windows/beta/


நன்றி- http://mahaa-mahan.blogspot.com/ ( சின்னவன் )

2 comments:

  1. நல்லது நண்பரே என்னுடைய பதிவு அப்படியே உங்கள் தளத்தில் இணைத்தமைக்கு

    ReplyDelete
  2. உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களை விட சிறப்பாக இந்த விடயத்தை என்னால் எழுத முடியாது நன்றி உங்கள் பதிவுக்கு.

    ReplyDelete