Welcome to our site.!!

Sunday, 26 June 2011

அழுகிறாள் என் ஆட்ட காறி!




அன்புள்ள அம்முகுட்டி
அர்த்தம் அறியா உன் அழுகை
ஆட்டம் காண வைக்குதடி
அறிந்திருந்தும் அறியாமல்

அதட்டிவிட்டேன் அழுகின்றாய் - சரி
அணைத்தாலும் அழுகின்றாயே
அர்த்தம் அறியேனே

அசந்து அணைத்துடுவேன்
ஆனந்த கண்ணிர் என்றால்
அவஸ்தையோடு அழுகின்றாய்
ஆடிபோகிறேன்
ஆறுதல் படுத்துவதற்குள்.

அந்தரங்க ஆயுதமாய்
அம்மணி அரங்கேற்ருறாள்
அழுகையை தானோ ??

அறித்துவிட்டேன் அவளை
அசல் ஆட்டகாறி தான்
ஆட வைத்துவிட்டாள்
அவளோடு என்னை.
ஆவர்த்தனமாய் உன் அழுகை
ஆனாலும் ரசிக்கின்றேன்
அழுகின்றாய் எனக்காக.

-கபிலன் 

1 comment:

  1. மழலை மனம் புரியா கவிதை - அருமை

    ReplyDelete