Welcome to our site.!!

Friday, 17 June 2011

பாலாவின் அவன் இவன் திரை விமர்சனம்!


நடிகர்கள்:ஆர்யா,விஷால்,மதுசாலினி,ஜனனி ஐயர்.
இயக்கம்: பாலா  
இசை  யுவன் 
தயாரிப்பு கல்ப்பாத்தி அகோரம் 


பல மக்களின் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வெளிவந்திருக்கிறது பாலாவின் அவன் இவன் சொத்துக்களை இழந்து விட்டு வெறும் அரண்மணையை மட்டுமே வைத்துக்கொண்டிருக்கும் ஜமீன் ஐனஸ் கதாபாத்திரத்தில் ஜிஎம் குமார். என்னதான் சொத்துக்களை இழந்துவிட்டாலும் ஜமீன் மேல் மாறாத பாசத்துடன் இருக்கும் ஊர் மக்கள். அவரின் பிறந்தநாளுக்கு அவரை தேரில் வைத்து இழுத்துச்செல்லும் அளவுக்கு பாசம். ஆனால் அவரின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் வைத்துகொள்ளும், அந்த மாதிரியான ஜமீன், ஊர்மக்கள் பாசம் கிடையாது. வீட்டில் ஒருவராக, வா போ என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு பாசம், ஒன்றாக உட்கார்ந்து தண்ணியடிக்கும் படியான சினேகிதம். 

அந்த ஜமீனுக்கு உட்பட்ட, திருட்டையே தொழிலாக கொண்ட ஒரு ஊரில் இருக்கும் இருவர்கள்தான் அவன் இவன் விஷால் ஆர்யா. ஊர்மக்கள் போலவே இந்த இருவரும் ஜமீன் ஜிஎம் குமாருக்கு மிகவும் க்ளோஸ். குல தொழிலான திருட்டில் கில்லடியான ஆர்யா, குலத்தொழிலில் ஆர்வமில்லாமல் நாடகம், கூத்து இவற்றை மூச்சாக நினைக்கும் விஷால். விஷாலை நல்ல கலைஞனாக கொண்டுவரவேண்டும் என்று நினைக்கூம் ஜிஎம் குமார். இவர்கள் இவர்களுடைய குடும்பம், ஊர் இதைச்சுற்றிதான் கதை.

படத்தின் கதைக்களம், பிண்னனி ஆகியவற்றை நன்றாக புரிந்து கொள்ள முடிவதால், சில விசயங்கள் முரண்பாடுகளாக தெரிவதில்லை உதாரணம், திருடர்களுக்கு கிடாய் வெட்டி விருந்து வைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் போன்ற விசயங்கள். படத்தில் பெரிய திருப்பமோ, முடிச்சுகளோ இல்லாமல் ஜாலியாக பாதி படத்திற்கு மேல் போய்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது. ஊர் மக்களோ, ஆர்யா, விஷாலோ ஜிஎம் குமாருக்கு ஒரு பிரச்சினை என்றால் என்னவும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதுதான். படத்தின் மூன்றாவதி பாகம் முடிந்து கடைசி பாகத்தில் அறிமுகமாகும் வில்லன் ஆர்கே. அதன் பிறகு நடக்ககூடியதை பால படங்களை பார்த்தவர்களால் கண்டிப்பாக யூகிக்க முடியும். ஆனால் மிக கொடூரம்.

பின்ணனி இசையில் யுவன் கலக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு ஆர்தர் ஏ. வில்சன், எடிட்டர் சுரேஸ் அர்ஸ், சண்டை பயிற்சி சுப்பர் சுப்பராயன் என்று எல்லோருமே படத்தை தாங்கி இருக்கிறார்கள். முக்கியமாக வசனம் எஸ்.ராமகிருஷ்ணன் பாலாவுக்கு தோள் கொடுத்திருக்கிறார். காமெடி வசங்கள் சூப்பர். ஆர்யா, ஜிஎம் குமார், ஜனனி ஐயர், மதுஷாலினி என்று எல்லோரும் நன்றாக நடித்திருந்தாலும் எல்லோரையும் ஓவர் டேக் செய்துவிடுகிறார் விஷால். எனென்றால் படத்தில் நடிப்பவர் விஷால் என்று யாராலும் உணர முடியவில்லை. சூர்யா வரும் பகுதி ரசிக்க வைத்தாலும் அது படதில் ஒரு குறை  போலத்தான் இருக்கிறது.மொத்தத்தில் பாலாவின் அவன் இவன் சிறந்த பொழுது போக்கு படம் என்பதில் ஐயம் இல்லை.

10 comments:

 1. இது பாலாவின் படம் என்று உறுதியாக சொல்லமுடியுமா?

  ReplyDelete
 2. இது பாலாவின் படம் என்று உறுதியாக சொல்லமுடியுமா? illai

  ReplyDelete
 3. visaal acting + but ithu bala padam illai bala padamuna athu sethu madum than

  ReplyDelete
 4. padam paarkkalam thairiyamaga parunga aana feel panura alavukku onnum illa. bala padathil bala udaiya direction pesa padutho illaiya oru hero pesa paduvan . intha padathil hero vishaal madume. vishaalay oru naala hero vaga kaattiya bala vukku nantri. ok

  ReplyDelete
 5. bala padam thorkkavilai bala vudaiya sethu padathudan ithai oppidum pothu avan ivan oru periya visayame kitayathu. so bala padam thorkkavilai avarudaiya innaroru padathudan thorthu viddathu.

  ReplyDelete
 6. padathil irande irandu + than onnu vishaaludaiya maaru kan innu onnu gm kumar . and mudhal paadal
  .

  ReplyDelete
 7. இப்படத்தை பற்றி பதிவுலகில் எழுதும் அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன்.முதன் முதலாக பாலாவின் அவன் இவனை பாராட்டி வந்த பதிவு.
  நீங்கள் பாலாவின் எதிரியா?
  ஒருவனை அழிக்க வேண்டுமானால் அவன் செய்யும் தவறுகளையும் பாராட்ட வேண்டும்.
  இப்படித்தான் கலைஞரை பாராட்டி ஒழித்தார்கள்.
  நீங்களும் அதே பாணியை கடைப்பிடிக்கிறீர்கள் என்றால்...வாழ்த்துக்கள்.

  தயவு செய்து நான் எழுதிய அவன் இவன் பற்றிய பதிவை படிக்காதீர்கள்.தாங்க மாட்டீர்கள்.

  ReplyDelete
 8. அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் உங்கள் கருத்துக்கும் எனது நன்றிகள். வேலை காரணமாக உடனடியாக பதில் போட முடியவில்லை.

  ReplyDelete
 9. உலக சினிமா ரசிகன் ,
  தோழருக்கு நாங்கள் பதிவர்கள் எங்களுடைய மனவுலகில் இருப்பதை பதிவுலகில் எழுதுபவர்கள் .ஒரு படத்தை தரை குறைவாக விமர்சிப்பது எனக்கு என்றும் உடன் பாடில்லை ..ஒரு படத்தை உருவாக்கும் போது அவர்கள் எத்தனையோ கஷ்டங்கள் பட்டுதான் எடுக்கிறார்கள் .சினிமா உலகத்துடன் ஒப்பிடும் போது பதிவுலகம் ஒரு குண்டூசி என்பதை நான் என்றும் நினைவில் வைத்திருப்பவன்.பல கோடியில் எடுக்கப்படும் படங்களை பதிவுலகத்தில் நாங்கள் ஒரு தெருக்கோடியில் இருந்து கொண்டு தரைக்குறைவாக விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.மன்னிக்கவும் நண்பரே.

  ReplyDelete