Welcome to our site.!!

Monday, 2 May 2011

கார்த்திக்கின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.!

கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனான நடிகர் கார்த்திக்கின் திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதிகளின் மகளாகிய ரஞ்சனிக்கும் சூர்யாவின் தம்பியான கார்த்திக்கும் நிகழ்ந்த திருமண நிச்சயதார்த்தப் படங்கள் இணையதளத்தில் ரிசகர்கள் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் நடிகர் கார்த்திக்கை மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்த கிராமமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் சிறுது நேரத்தில் எதிர்பார்க்காத அளவில் அன்று அந்த கிரமமே விழாகோலமாக மாறியது. என்னதான் பணம், செல்வம் மற்றும் புகழின் உச்சிக்கு சென்றாலும் உறவுகளையும் தனது கிராமத்தையும் மறவாத சிவக்குமாரை கிராமமக்கள் அனைவரும் பாராட்டினர்.

1 comment: