Welcome to our site.!!

Wednesday, 18 May 2011

நடிகைகளின் ஆசைகள்.!

வர்ச்சி நடிகைகளில் பிரபல நடிகை இலியானா இவருக்கென்று மூன்று ரகசிய ஆசைகள் இருக்கிறதாம். அந்த ரகசிய ஆசைகளில் முதல் ஆசை, "சினிமாவில் சொந்தக் குரலில் பாடவேண்டும்.இரண்டாவது ஆசை,  ஐதராபாத்தில் இசைப்பள்ளி ஒன்று துவங்க வேண்டும்".மூன்றாவது ஆசை,ஒரு நடனப்பள்ளி நடத்தவேண்டும்". இதுதான் இப்போதைக்கு என்னுடைய ரகசிய ஆசைகள் என்றார்.



கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்கு சென்ற தமிழ் நடிகைகளான அசின், ஸ்ரேயா போன்ற நடிகைகள், அங்கே நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கின்றன.அதே போல த்ரிஷாவும் அங்கே இடம் பிடிக்க ஆசைப்பட்டார். ஹிந்தியில் இடம் பிடிக்க நடிப்போடு, அதீத கவர்ச்சியும் வேண்டும். அதைக் கட்டவிழ்க்க நான் தயார் என்று பாலிவுட் இயக்குநர்களிடம் சொல்லி வருகிறாராம் த்ரிஷா.




மீதாவுக்கு தமிழில் வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை சுவாரஸ்யமில்லாமல் கேட்டு வருகிறாராம்.வெறும் செக்ஸ் சிம்பலாக என்னைப் பார்ப்பது பிடிக்கவில்லை. கதையோடு கூடிய கிளாமர் தான் எடுபடும் என்கிறார் நமீதா.







கொலிவுட்டில் தனக்கு பொருத்தமான படம், கதாபாத்திரம் அமையாததால் தெலுங்கு பக்கம் பார்வையை திருப்பினார் ரீமாசென்.
தெலுங்கு பட இயக்குனர் ஆதித்யா, முழுவதும் பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த படத்தை எடுக்க போகிறோம்.இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரீமா பொருத்தமானவர் என்பதால் அவரை நடிக்க வைக்க முடிவு எடுத்தோம் என்கிறார். இவர் இயக்கிய தெலுங்கு படம் ஒன்றில் வெற்றி நாயகியானார் ரீமா.எப்படியோ, தெலுங்கு பக்கம் பிஸியாக இன்னொரு சுற்று வர ரீமா திட்டமிட்டுள்ளார்.

விஷாலுடன் ஜோடி சேர்ந்த "தாமிரபரணி" பானு தற்போது தமிழ் படங்கள் இல்லாது தவிக்கிறார்."பொன்னர் சங்கர்" படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.ஏ.சந்திரசேகரின் "சட்டப்படி குற்றம்" படத்திலும் நடித்திருந்தார். கிளாமரிலும், ஒற்றை பாடலுக்கு ஆட அம்மணிக்கு விருப்பம் இல்லையாம்.இனி நான் நடிக்கும் எந்த மொழி படமாக இருந்தாலும் தரமான கதாபாத்திரமாகவே நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் தாமிரபரணி பானு.

4 comments:

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.
    Share

    ReplyDelete
  2. நன்றி தோழர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete