Welcome to our site.!!

Monday, 16 May 2011

எண்டவர் விண்கலம் இறுதி பயணம் வீடியோ இணைப்பு.!

எண்டவர் விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து  திங்கள்கிழமை புறப்பட்டது.
16 நாட்களுக்கு பிறகு அது பூமிக்கு திரும்பும். 25 முறை விண்ணுக்குச் சென்று திரும்பியுள்ள எண்டவருக்கு இதுவே கடைசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்திற்கு பிறகு அதற்கு ஓய்வு கொடுக்க நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.
ஆறு விண்வெளி வீரர்களுடன் எண்டவர் விண்கலம் விண்வெளியிலுள்ள சர்வதேச ஆய்வு மையத்துக்குத் தேவையான 2 பில்லியன் டொலர் மதிப்பிலானப் பொருட்களை எடுத்து செல்கிறது.

video
இது எண்டவர் விண்கலத்தின் கடைசி பயணம் என்பதால் அது விண்ணுக்கு செலுத்தப்படுவதை காண கென்னடி விண்வெளி மையத்துக்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்திருந்தனர். கடந்த மாதம் எண்டவர் விண்கலத்தை செலுத்த முயன்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 comment: