Welcome to our site.!!

Tuesday, 10 May 2011

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு மூன்று தலைவர்கள் நியமனம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு மூன்று அணித்தலைவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு 26வயதுடைய  Alastair Cook அணித்தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.2006 March 1 இல் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தாலும்,  ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 2006 June 28 இல் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற
போட்டியில் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை 26போட்டிகளில் விளையாடி உள்ள Alastair Cook  33துடுப்பாட்ட சராசரி(Batting Average) விகிதத்தில் 858 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை 34வயதுடைய Andrew Strauss தொடர்ந்தும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் அணித்தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.2004 May 20 இல் நியூசிலாந்து  அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து இதுவரை 82போட்டிகளில் விளையாடி உள்ள Andrew Strauss 43.14துடுப்பாட்ட சராசரி(Batting Average) விகிதத்தில் 6084 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


T20 கிரிக்கெட் போட்டிகளுக்கு அணித்தலைவராக 24 வயதுடைய Stuart Broad நியமிக்கபட்டுள்ளார்.2006 August 30 இல்  பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள்  ஒன்றின் மூலம் தனது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி இருந்தாலும், டெஸ்ட்  கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் 2007 December 9 இல் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி ஒன்றின் மூலம் தான் தனது டெஸ்ட்  சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.இதுவரை 34 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள  இவர் 99விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் 76போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 130விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. சூப்பர் அப்பு..

    ReplyDelete
  2. திரட்டிகளில் முதன்மை திரட்டியான --- தமிழ் திரட்டியில்--- தங்கள் பதிவை இணைத்து
    அதிக வாசகர்களை பெறுங்கள் --தமிழ் திரட்டியின்--- முகவரி

    http://tamilthirati.corank.com/

    தங்கள் வரவு இனிது ஆக

    ReplyDelete
  3. நன்றி சித்திரா அக்கா

    ReplyDelete
  4. மனோவி நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  5. சண்முககுமார் நன்றி உங்கள் தகவலுக்கு நாங்கள் இணைந்து விட்டோம் நன்றி தோழரே.

    ReplyDelete