Welcome to our site.!!

Monday, 9 May 2011

ஆண்விபச்சாரம் ஒரு பார்வை!

மாறிவரும் நவீன  காலத்தில் பல விதமான புதிய கலாச்சாரங்கள் தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றன.இன்றைய ஆண்கள் பெண்கள் போல தலை முடியை வளர்த்து அதற்கு பல நிற வர்ணம் பூசி காதில் வளையங்களை போட்டு பெண்களின் கலாசாரத்தை பின்பற்ற முற்படுவதும் பெண்கள் ஆண்கள் போல தலை முடியை கட்டையாக வெட்டி ஆண்களின் ஆடை அலங்காரத்தில் நாட்டம் கொண்டு ஆண்கள் போல ஆண்களின் கலாச்சாரத்தை பின்பற்ற  முற்படுவதும் இன்றைய கலாச்சாரத்தில் சகயமானது.இதே போலவே ஆண்விபச்சாரம் என்னும் புதிய கலாச்சாரம் உலகம்  எங்கிலும் வேகமாக பரவி வருகின்றது.இதைப்பற்றிய விடயத்தை விரிவாக ஆராய்வோம்.



உலகம் முழுவதும் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது சகயமானது.ஆனால் ஆண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது புதுமையானது.பல ஆண்விபச்சாரிகள் தங்களுக்கு என்று பல வலையமைப்புக்களை அனைத்து நாடுகளிலும் அமைத்து,மிகவும் லாபம் ஈட்டக்கூடிய தொழிலாக அவர்கள் இதனை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்விபச்சாரிகளை நாடி  திருமணம் ஆகாத பெண்களை விட திருமணம் ஆன பல பெண்கள் செல்வது உலகம் முழுவதும் சகயமாகி விட்டது என்று கூறலாம்.


இந்தகைய கலாச்சாரங்கள் மேலைத்தைய நாடுகளில் சர்வ சாதாரணமானது என்றாலும்.ஆசிய நாடுகளிலும் இந்த கலாச்சாரம் மிக வேகமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.அதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை குறிப்பிடலாம்.


இந்தியாவின் ஒரு பெருநகரத்தில் ஒரு பெண்,வைத்தியராக மக்களுக்கு பணியாற்றி வந்திருக்கிறார்.தனது வீட்டில் ஒரு கட்டடம் கட்டி அதில்  கிளினிக் நடத்தியும் மக்களுக்கு சேவையாற்றி வந்துள்ளார்.இந்த பெண் மருத்துவருடைய கணவரும் ஒரு மருத்துவர்.இவருடைய கணவரும் வேற ஒரு வைத்தியசாலையில் கடமையாற்றி வந்திருக்கிறார்.இவர்களின் பிள்ளைகள் வெளியூரில் தங்கி இருந்து படித்து கொண்டிருந்துள்ளனர்.


ஆரம்பத்தில் இருந்து இந்த பெண்வைத்தியருக்கு பல ஊர்களில் நண்பிகள் இருந்திருக்கிறார்கள்.பெண் வைத்தியருக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது அந்த பெண் நண்பிகளுடன் அரட்டையடிப்பது என்று தனது பொழுதை கழித்து வந்திருக்கிறார்.இந்த பெண் நண்பிகளும் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒருநாள் எந்த பெண்வைத்தியரின் மருத்துவ கிளினிக்கு ஒரு ஆண் வந்து தனது நோய்க்கு சிகிச்சை பெற்று சென்றிருக்கிறார். தனது நோய்க்காக பல முறை அந்த வாலிபர் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்று கொண்டிருந்த  சந்தர்ப்பத்தில் இந்த பெண் வைத்தியருக்கும் அந்த வாலிபருக்கும் இடையில் ஒரு முறையற்ற கள்ள தொடர்பு ஏற்பட்டுவிட்டது.அந்த ஆணைவிட பல வயது கூடியவரான அந்த பெண் வைத்தியர் தனது கணவரிடம் கிடைக்காத உடல் ரீதியான தேவைகளை இந்த வாலிபரிடம் இருந்து பெற்றுக்கொள்ள,இந்த வாலிபர் தனது பண தேவை உட்பட பல தேவைகளை இந்த பெண் வைத்தியரிடம் இருந்து பெற்று கொண்டு இரண்டு பெரும் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.


இந்த வேளையில் காலப்போக்கில் இந்த தொடர்பு பெண் வைத்தியரின் நண்பிகளுக்கும் தெரியவர அவர்களும் இந்த வாலிபரை நாடி அவர் மூலம் தங்கள் உடல் ரீதியான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அந்த வாலிபர் இந்த பெண்கள் மூலம் தனது பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இப்படியே இந்த வாலிபருக்கு ஒரு பெண் வட்டம் உருவாகிவிட்டது.


மேலைத்தேய நாடுகளில் ஆண்விபச்சாரம் என்பது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது.பல உயர் பதவிகளின் இருக்கும் பெண்கள் இந்த ஆண்விபச்சாரிகளை நாடி செல்வது வழமையானது.விபச்சார நிலையத்தில் ஆண்களின் புகைப்படங்களும் அவர்களை பற்றிய விபரங்களும் அடங்கியிருக்கும்.ஆண்களை நாடிச்செல்லும் பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்விபச்சாரியை தெரிவு செய்துவிட்டு வருவார்கள். இணையத்தளத்திலும் முன்பதிவு செய்வதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்கள் பெண்களை ஹோட்டல்,உணவு விடுதிகள் மற்றும் அவர்களின் வீடுகள் என்று தேடிப்போய் அவர்களக்கு உடல் ரீதியான தேவைகளை பூர்த்திசெய்கின்றனர்.இந்த ஆண்விபச்சாரிகள் ஒரு மாதத்துக்கு ஆறு அல்லது ஏழு லட்சங்கள் வரை(இலங்கை நாணயத்தின் பெறுமதியில்) உழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment