Welcome to our site.!!

Sunday, 8 May 2011

சென்ற வார "சுவையான " கிசு கிசுக்கள் .!

'நான் அவனில்லை-2' நடித்த நடிகை ஸ்வேதா.இவரைப் பற்றி கேரளாவில் கன்னாபின்னாவென தகவல்கள் பரவின. படநிறுவன நிர்வாகி கைது, அதிக பட்ச கவர்ச்சி காட்சிகளில் 'பலான' பட நாயகி போல படத்தில் பல காட்சிகளில் ஸ்வேதா மேனன் நடித்துள்ளதாகவும் பேச்சு கிளம்பியது.அந்த மலையாள படத்தைதான் தமிழில் 'தாரம்' என்ற பெயரில் வெளியிடுவதாக சொல்லியிருந்தார்கள்.
படத்தின் இயக்குனர் அனில் கூறியதாவது இந்த படம் அர்த்தமுள்ள, ஆழமான கதையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்வேதா நன்றாக நடித்துள்ளார்.
வர்த்தக யுக்தியில் காட்சிகளை எடுத்துள்ளோம்.
இதை யாரும் குற்றம் சொல்ல முடியாது என்றார். நடிகை ஜெயபாரதி சொக்க வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ரதிநிர்வேதம்' படத்தை இன்றும் ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளார்கள்.
பத்மராஜன் எழுதி, பரதன் இயக்கியிருந்த இப்படத்திற்கு
ஜெயபாரதியின் நடிப்பால் மொழியை கடந்த வரவேற்பு இருந்தது.
அதைப்போல ஸ்வேதா நடித்துள்ள இப்படத்தை ரசிகர்கள் ரசனையோடு கண்டுகளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.


ம்பாய் பட நாயகிக்கு தற்போது அந்த மாதிரி பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளதாம்.
நடிகை தீப்தி நாவல் இயக்கும் 'தோ பைசே கி தூஹ்ப் சாரனா கி பாரீஷ்' படத்தில் மனிஷா கொய்ராலா நடிக்கிறார்.
கதைப்படி அவருக்கு பாலியல் தொழிலாளி வேடமாம்.
இது பற்றி மனிஷா கூறும்போது இதற்கு முன் இது போன்ற வேடத்தில் நடித்ததில்லை.
வாழ்க்கையில் போராட்டத்தை மட்டுமே பார்க்கும் ஒரு பெண்ணின் கதை. பட இயக்குனரான தீப்தியும் சிறந்த நடிகை.
நான் அறிமுகமான 'சவுதாகர்' இந்தி படத்தில் எனக்கு மாமியாராக அவர் நடித்திருந்தார்.
இப்படத்துக்காக அவர் என்னை தேர்வு செய்தது சந்தோஷமாக உள்ளது.
தீப்தியின் இயக்கத்தில் நடிப்பது எனக்கு சுலபமான விஷயமாக இருக்கும் என்றார். 


நீண்‌ட இடைவெளிக்கு பிறகு கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடிய ஜே ஜே படத்தின் நாயகிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் போனார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் மேக்கப் இல்லாமலேயே அழகாக இருப்பதாக சில இயக்குநர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் அப்படியே நம்புகிறேன்.
இருந்தாலும் குறைந்த அளவு மேக்கப்புடன் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இந்த விடயத்தில் மடோனாவை பின்பற்ற நினைக்கிறேன்.
தன் வயதுக்கேற்ற வகையில் அவர் எப்போதும் அழகான மேக்கப்புடன் இருப்பார்.
அது எனக்கு பிடிக்கும். மேக்கப் இல்லாமல் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக என் மனதில் குடிகொண்டிருக்கிறது.


மீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த அந்த நடிகருக்கும் என்காதல் சொல்ல நேரம் இல்லை என டூயட் பாடிய நடிகைக்கும் இடையில் காதல் என கிசு கிசுக்கப்பட்டது.இதை அறிந்த நடிகரின் அப்பா, நடிகரை கண்டித்ததுடன் இனிமேல் அந்த பெண்ணுடன் எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவையும் போட்டிருக்கிறார். இந்த ஜோடியை வைத்து படம் எடுக்க நினைத்த முக்கிய புள்ளிகளிடமும் ‌வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தந்தைக்குலம். அதனால் அடுத்தடுத்து சினிமாவில் ஜோடி சேர வாய்ப்பில்லாமல் போனது அந்த ஜோடிக்கு. இப்போது நிஜத்திலும் ஜோடி சேர முடியாத அளவுக்கு நடிகருக்கு திருமணத்தை நிச்சயித்து விட்டனர். அதனால் தான் அம்மணி இனி தமிழ்ப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அந்த வாரிசு நடிகர் பையா பட நாயகன் கார்த்தி தான்.


ந்த மாதம் கோடைக்கு பயந்து அனைத்து நடிகர்களும் ஆளுக்கொரு வெளிநாடு என்று பறந்து கொண்டிருக்கிறார்கள்.
சிலருக்கு அதிலும் ராஜ யோகம். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடப்பதால் தயா‌ரிப்பாளர் காசில் கோடையை குளிர்ச்சியாக்கி வருகிறார்கள்.
நமிதா இப்போது பாங்காங்கில் இருக்கிறாராம். கூடவே சந்தியா, மோனிகா. கூட்டாக வெளிநாடு சுற்றுலா அடிக்கிறார்களோ என்று சந்தேகம் வேண்டாம்.
மூவரும் படப்பிடிப்புக்காகதான் வெளிநாடு சென்றிருக்கிறார்கள்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் இயக்கும் இந்தப் படத்துக்கு தமிழில் வைத்திருக்கும் தலைப்பு 'போட்டுத்தள்ளு'.

3 comments: