Welcome to our site.!!

Sunday, 1 May 2011

பின்லேடன் ஆட்டம் முடிந்ததா.?

அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாபா
டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.சவுதியில் பிறந்த ஒசாமா பின்லேடன் அல்குவைதாவின் தலைவரானான்.அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒபாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்க இரட்டை ஙகோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தாக்குதல் நடத்தினான்.இந்த முறை ஒசாமா பலி உறுதி செய்யப்பட்டுள்ளது. இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷச்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.ஆனால் இதுவரை அல்குவøதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

1 comment: