Welcome to our site.!!

Saturday, 2 April 2011

இறுதி போட்டியில் தோல்வி கண்டது சிங்கள தேசம் .



இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் Wankhede Stadium

மைதானத்தில் மும்பையில் நடைபெற்று முடிந்த 10வது உலக கிண்ண இறுதி 

போட்டியில் இலங்கை அணியினரை 6 விக்கெட் வித்தியாசத்தில் 


வீழ்த்தி 28 வருடங்களின் பின் தோனி தலைமையிலான இந்திய அணியினர் 

புதிய சரித்திரம் படைத்துள்ளனர்.


முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் ஆரம்பத்தில் மிகவும்


மந்தமாகவே ஓட்டங்களை பெற்று 

வந்தனர்.இலங்கையின் ஆரம்ப 

துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்க 

இந்திய வேக பந்து வீச்சாளர் சாகிர் 

ஹானின் பந்து வீச்சில் சேவாக்கிடம் 

பிடிகொடுத்து  சொற்ப ஓட்டங்களுக்கு 

ஆட்டமிழந்து செல்ல, இலங்கை 

அணியினர் பெரும் நெருக்கடியை சந்தித்த 

வேளையில் தில்ஷன் மற்றும் சங்ககரா ஆகியோர் இணைந்து மந்தமாக 

ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட விகிதத்தை ஓரளவு உயர்த்தினர்.இந்த 

தருணத்தில் ஹர்பயன்  சிங் பந்து வீச இந்திய அணித்தலைவரால் 

அழைக்கபட்டார்.ஹர்பயன்  சிங்கின் அபார பந்து வீச்சால் டில்சன் போல்ட் 

முறையில் ஆட்டமிழந்து சென்றார்.அவரை தொடர்ந்து இலங்கை 

அணித்தலைவர் சங்ககரா யுவராஜ்  இன் சுழல் பந்து வீச்சில் இந்திய 

அணியின் விக்கெட் காப்பாளர் டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து 

சென்றார்.அவரை தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணியின் 

உபதலைவர் மகேல ஜெயவர்த்தனவின் நிதானமாகவும் அபாரமாகவும் 

துடுப்பெடுத்தாடி சதத்தை எடுத்தார்.எனினும் இலங்கை அணியின் இடை 

நிலை துடுப்பெத்தாட வந்த வீரர்கள் பொறுப்பில்லாத நிதானம் இல்லாத 

துடுப்பாட்டத்தால் இந்திய அணியின் அபார பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க 

திணறி விக்கெட்களை இழந்தனர்.எனினும் இறுதி வரையும் ஆட்டமிழக்காது  

நிலைத்து இன்று ஆடிய மகேல ஜெயவர்த்தனவும் பின்னேர் இறுதியாக 

வந்து அதிரடியாக துடுப்படுத்தாடிய திச்சார பெரேரா வின் துடுப்பட்டத்தாலும்

இலங்கை அணியினர் 6விக்கெட்களை இழந்து 50 ஓவர்கள் முடிவில்274  

என்னும் கௌரவமான இலக்கை எய்தினர்.இலங்கை அணியின் அதிக 

பட்சமாக  மகேல ஜெயவர்த்தன ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றார்


275 இன்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினருக்கு ஆரம்பமே 

அதிர்ச்சி காத்திருந்தது. லசித் மலிங்காவின்   பந்து வீச்சில் சேவாக் LBW 

முறையில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஓட்டமிழந்து செல்ல, இந்திய 

அணியினர் ஒரு நெருக்கடியை  சந்தித்தனர்.அனினும் மறுமுனையில்    

இம்முறை உலக கிண்ணம் வெல்ல முக்கிய பங்கு வகித்த கிரிக்கெட் உலகின் 

கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தார். 

எனினும் அவரும் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மலிங்காவின் பந்து 

வீச்சில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்ககாராவிடம் பிடிகொடுத்து 

ஆட்டமிழந்து சென்றார்.அனினும் அடுத்து களம் இறங்கிய கெளதம் கம்பீர் 

மற்றும் வீரத் கோலி   ஆகியோர் இணைந்து இந்திய அணியின் ஓட்ட 

எண்ணிக்கையை உயத்தினர். எனினும் வீரத் கோலி   இலங்கை அணியின் 

டில்சானின் சுழல் பந்து வீச்சில் ஆட்டமிழந்து செல்ல அடுத்து களமிறங்கிய 

இந்திய அணித்தலைவர்டோனி மிக நிதானமாகவும் அதிரடியாகவும் கெளதம் 

கம்பீர் உடன் இணைந்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர். கம்பீர்

97 ஓட்டங்களை பெற்றிருந்த போது பெரேராவின் பந்து வீச்சில் போல்ட் 

முறையில் ஆட்டமிழந்து செல்ல அடுத்து களம் இறங்கிய யுவராஜ் சிங் 

இந்திய அணித்தலைவர் டோனியுடன் இணைந்து இந்திய அணியின் 

வெற்றியை உறுதி செய்தனர். அதிரடியாக துடுபெடுத்தாடி 91 ஓட்டங்களை 

பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காது இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்த 

இந்திய அணித்தலைவர் தோனி இன்றிய போட்டியின் ஆட்டநாயகனாக 

தெரிவு செய்யபட்டார்.இறுதியில் 277 ஓட்டங்களை பெற்று இந்திய அணியினர் 

இலங்கை அணியினரை 6விக்கட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக 

கிண்ணத்தைகைப்பற்றினர்.இந்த உலக கிண்ண தொடர் ஆட்டநாயகனாக 

இந்திய அணியின் யுவராஜ் சிங் தெரிவு செய்யப்பட்டார்.




முக்கிய குறிப்பு- இலங்கை அணியின் பல வெற்றிகளுக்கு 


காரணமாகவும்,வெள்ளையின மக்கள் வீரர்களின் கேலிகள் கிண்டல்கள் 


என்பவற்றை   முகம் கொடுத்து உலக சாதனை படைத்த இலங்கை அணியின் 


முத்தையா முரளிதரனின் இறுதி போட்டியாக அமைந்தாலும் ,அவருக்காக 


உலக கிண்ணத்தை கைப்பற்றுவோம் என்று களம் இறங்கிய இலங்கை 


அணியினருக்கு   உண்மையில் ஒரு பெரும் ஏமாற்றமே. இது 


முரளிதரனுக்கும் ஏமாற்றமே.ஒரு உண்மையான வீரனை நாங்கள் 


இழக்கின்றோம் என்பது உண்மை. முரளிதரனின் சாதனைகள் வரும் 


காலத்தின் இந்திய அணியின் சுழல்  பந்து வீச்சாளர் கர்பயன்  சிங்கினால் 


முடியடிக்கபடலாம் ஆனால் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று 


அழைக்கப்படும் இன்றுவரை என்றும் பதினாறு போல துடுபெடுத்தாடும் 


சச்சின் டெண்டுல்கர்க்கும் அனேகமாக இதுவே இறுதி உலக கிண்ண 


போட்டியாக அமையலாம்.அனவே இந்திய இந்த முறை உலக கிண்ணத்தை 


கைப்பற்றி சச்சின் சரித்திரத்தில் ஒரு மைக்கல்லை நாட்டி கௌரவத்தை 


கொடுத்துள்ளனர்.சொல்ல போனால் இந்த முறை உலக கிண்ணத்தை பெற்று  


கொடுத்ததில் சச்சினின் துடுப்பாட்டமும் தான் ஒரு காரணம்.எனவே 


முரளிதரனின் கிரிக்க்ர்ட் வாழ்க்கை இன்றைய நாளுடன் முடிவுக்கு 


வந்துள்ளது அவருக்கு எனது பிராத்தனைகள் பலகாலம் வாழ்ந்து உங்கள் 


திறமைகளை மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்து திறமையான வீரர்களை 


உருவாக்க வீண்டும் அதே வீளை சச்சினுக்கும் எனது எனது பிராத்தனைகள் 


நீங்கள் அடுத்த உலக கிண்ண போட்டியிலும் விளையாடி இந்திய அணியின் 


வெற்றிக்கு உதவ வேண்டும்.

1 comment: