Welcome to our site.!!

Sunday, 13 March 2011

நடுநிசி நாய்கள் திரைவிமர்சனமும் கெளதம் பீட்டர் மேனனின் வண்டவாளங்களும்

சைக்கோ,த்ரில்லர் என்பது முடிவாகிவிட்டது. ஹலிவூட் படமா கிலோ பதினைஞ்சு பத்து கிலோ அள்ளி போடுங்க.எங்கியாவது முப்பது சதவீதம் தள்ளுபடியில் SINDNEY SHELDON, DAN BROWN  மாதிரி நிறைய பேர் வேர்வை சிந்தி இரத்தம் சிந்தி அழுத்திய புத்தக்கங்கள் கிடைக்கும் அதையும் 
அள்ளுங்க.வீட்டுக்கும் வந்து எல்லாத்தையும் மிக்ஸில அரைச்சு ஒரு கரண்டி உப்பு சேர்த்தா  வந்திரும் சைக்கோ திரில்லர். 

படத்துக்கு பேரு வித்தியாசமா வைக்கணுமே? பசுவைய்யாவோ ,கொசுவைய்யாயோ எழுதின , எதோ ஒரு புத்தக பெயரும் நடுநிசி நாய்கள்,செம டைட்டில் அதையும் சேர்த்து கொள்ளுங்க!படத்துல இசை கிடையாது,என்று பில்டப்பா ஏத்துங்க பிச்சு கிட்டு போகும் படம்.

நடுநிசி நாய்கள் கெளதம் பீட்டர் மேனன் இயக்கத்தில் வந்த புத்தம் புதிய பிட்டு திரைப்படம் .சினிமாவில் காமம் மூன்று வகை கவர்ச்சி,ஆபாசம்,வக்கிரம்.
ஆனால்  இந்த படத்தில் பல இடங்களில் வக்கிரத்தை தாண்டுகிறது.

படத்தின் கதைக்காக மல்லுக்கட்டாமல்,சிட்னி ஷெல்டனின் TELL ME YOUR DREAMS ஆங்கில நாவலில் கொஞ்சம், ஹைகட்ச் காக்கின் சைக்கோவிலிருந்தும்,பிரதான பாத்திரமான வீராவை THE SILENCE OF THE LAMBS  லிருந்தும் ,கொஞ்சம் சிவப்பு ரோஜாக்கள்,கொஞ்சம் அந்நியன் (அந்நியனே TELL ME YOUR DREAMS தான்),கொஞ்சம் மூடுபனி, என ஒட்டுமொத்தமாக பல படங்களில் பிரபலமான கட்சிகளை சுட்டு சுட்டபடம் வேண்டுமா சுடாத படம் வேண்டுமா என்று படம் எடுத்திருக்கிறார் கெளதம் பிட்டர் மேனன். இது சர்வ நிச்சயமாக சுட்ட படம் தான் .அதிலும் வக்கிரமாக எடுக்கபட்ட சுட்ட படம்.(ஏற்கனவே கேமரா ஆங்கிள் கூட மாற்றாமல் டிரெயில்ட் படத்தை சுட்டு பச்சைக்கிளி முத்துசரம் எண்டு எடுத்தவர் தானே பீட்டர் மேனன்.

படம் முழுக்க யாரவது ஆ ஆ ஊ ஊ என்று காது கிழிய கத்தினாலே  அது திரில்லர் படமாகிடும் என்று கெளதம் பீட்டர் மேனன் நினைத்து இருக்கலாம். TELL ME YOUR DREAMS,சைக்கோ படங்களை பார்த்து பிட் அடித்தவர் 
அந்த படங்களில் வெறும் மௌனத்தின்  மூலமே சலனமில்லாத காட்சிகளாலுமே திகிலை உண்டாக்கியிருப்பதை காணலாம் .படம் முழுக்க யாரையாவது வற்புணர்ச்சி  செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்செஸ்ட் கதைகள் நமக்கு புதிதல்ல.அவை எப்பொழுதும் இணையத்திலும்,பிட்டு புத்தாகங்களிலும் இருந்தவைதான்.ஆனால் பிட்டு புத்தகம் எழுதுறவன் கூட அப்பா மகன் இன்செஸ்ட் கதைகள் எழுதுகிறது .இல்லை இது பீட்டர் மேனன் ஆல் மட்டுமே முடியும்.

புது படம் என்றவுடன் தந்தையுடன் படம் பார்க்க சென்ற ஒரு பிள்ளையில் மனோ நிலையில் இருந்து சிந்தித்து பாருங்கள் இல்லை படம் பார்ப்பதற்காக மகனை கூட்டி சென்ற தந்தையின் மனோநிலையை சிந்தித்துபாருங்கள்.அப்பா மகன் இடையே நடக்கும் செக்ஸ் கட்சிகளை பார்க்கும் குழந்தைகளின் மனது எப்படி இருந்திருக்கும். இந்த படத்திற்கு சேர்டிபிகட்  கொடுத்த தணிக்கை குழு உறுப்பினர்கள் கண் தெரியாதவர்களா இல்லை? காது கேட்காதவர்களா? கெளதம் பீட்டர் மேனனின் உள் மனது இந்த படம் மூலம் நன்கு வெளிப்பட்டு விட்டது.இந்த படத்தை பார்த்த பல லட்சங்களில் இரண்டு பிள்ளைகள் இந்த படத்தில் வாறது மாதிரி நடந்தால் குடும்பத்தின் நிலை என்ன ? இத் திரைப்படத்தை யாரவது தொலைக்காட்சியில்  ஒளிபரப்பினால் வீட்டுக்குள் வக்கிரம் புகுந்துவிடும்.காசு சம்பாதிப்பதற்காக ,பீட்டர் மேனன் இப்படி படம் எடுத்து பல சின்னஞ்சிறு பிள்ளைகளின் மனதில் காமம் என்னும் நச்சு விதையை வளர்ப்பதை  காட்டிலும் பார்க்க கட்டிய மனைவியை கூட்டி கொடுத்து சம்பாதிப்பது சிறந்தது.

8 comments:

 1. செம அலசல். செம கலக்கல்.

  எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

  ReplyDelete
 2. வந்துட்டாருய்யா... ஒரு பத்து பதினஞ்சு விமர்சனங்கள படிச்சுட்டு ஒரு அவியல் விமர்சனம். படம் தான் வயது வந்தவர்களுக்கு மட்டும்னு போட்ருக்கு. அப்புறம் ஏன் குழந்தைகள கூட்டிட்டு போறீரு. வயது வந்த தந்தை மகனுக்கு இத பாத்து சினிமான்னு கூட பகுத்தறிய தெரியாதா? வோட்டு வாங்கனும்னே விமர்சனம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க இப்போல்லாம். நீங்களும் அதுல ஒரு ஆள் ஆகா வேண்டாம், ப்ளீஸ்.

  ReplyDelete
 3. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் Prakash

  ReplyDelete
 4. நன்றி உங்கள் வருகைக்கும் அறிவுரைக்கும் கருத்துக்கும் vickyra

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete