Welcome to our site.!!

Thursday, 10 March 2011

புத்தகம் படிக்கும் எந்திரன்

வாஷிங்டன்: மனிதர்களைப் போலவே இனி ரோபோவும் புத்தகம் வாசிக்கும். வாசித்ததைப் புரிந்தும் கொள்ளும். இதுப் போன்ற ஒரு அதி நவீன ரோபோவை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
ரோபோக்கள் இதுநாள் வரை நடப்பது, ஓடுவது, எடுப்பது, கொடுப்பது மாதிரியான செயல்கள் செய்து வந்தன. ஆனால் அவற்றால் புத்தகம் வாசிக்க முடியாது. ஏனெனில் எழுத்துக்களை இனம் காண்பது என்பது மிகவும் சிரமமான காரியம். எழுத்துக்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. வேறு வேறு வடிவங்கள், அளவுகள் என மாறிக் கொண்டேயிருப்பதால் எழுத்துக்களை அடையாளம் கண்டுப்பிடிப்பது ரோபோக்களுக்கு இயலாததாகவே இருந்து வந்தது.
ஆனால் இப்பொழுது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இங்மர் போஸ்னர் மற்றும் பால் நியூமேனும் க்வீன்ஸ்லேண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பீட்டர் கார்க்குடன் இணைந்து எழுத்தை இனம் கண்டு புத்தகம் வாசிக்கும் திறனுடைய ரோபோவைக் கண்டுப்பிடித்துள்ளனர். Optical Character Recognition (OCR) எனப்படும் எழுத்துக்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் மென்பொருளை ரோபோவிற்குள் பொருத்தி இச்சாதனையை செய்துள்ளனர். இதனால் எழுத்துக்களை மற்ற வடிவங்களிலிருந்து இனம் பிரிக்க முடியும். அது மட்டுமின்றி வார்த்தை சரியாக எழுதப்பட்டுள்ளதா என கண்டுப்பிடிக்க ’ஸ்பெல்லிங்’ சோதிக்கும் வசதியும் உள்ளது. மேலும் வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்ள அகராதியும் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் படிப்பதற்கு அர்த்தமும் புரிந்துக்கொள்ளும்.

சமீபத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் ’சிட்டி’ ரோபோ ஒரே நொடியில் புத்தகத்தை படித்து அதிலிருந்து யார் என்ன கேள்வி கேட்டாலும் டக்கென பதிலளித்து அதிசயிக்க வைக்கும். மேலும் மருத்துவத் துறை புத்தகங்களையும் ஒரே நொடியில் படித்து ஐஸ்வர்யா ராய் தேர்வு எழுதும்போது உதவுவதுப் போலவும் காட்சிகள் வரும். ஆனால் இப்பொழுது நிஜ உலகிலேயே ரோபோக்கள் புத்தகம் வாசிக்கும் வண்ணம் செய்து விஞ்ஞானிகள் புது சாதனையை செய்துள்ளனர்.

4 comments: