Welcome to our site.!!

Tuesday, 8 March 2011

யாரை தான் நம்புறதோ ........!!!!!!


இராமன் எத்தனை ராமனடி என்பது திரைப்பாடல்!
போலிகள் எத்தனை போலிகளடி இன்றைய நிலைப்பாடல்!!

போலிச் சாமியார்கள்!
போலி மருத்துவர்கள்!
போலி அரசியல்வாதிகள்!
போலி ஆன்மீகவாதிகள்!
போலி நாத்திகவாதிகள்!
போலிகள் அசல்களை விட “பளிச்”, “பளிச்”
போலியாளர்கள் பங்கு பிரிக்கையில்தான் “இளிச்”

யாரைதான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று
குழம்பிப் போன தமிழர்களே கொஞ்சம் நில்லுங்கள்!

கள்ள நோட்டு கலவரத்தில் நல்ல நோட்டுக்களை எறிய முடியுமா!
உண்மைக் கவிஞன் (போலியல்ல) என்ற முறையில் சிறிய அறிவுரை!

சாமியை நம்புங்கள்!
அல்லாவானாலும் சரி, இயேசுவானாலும் சரி, இராமனானாலும் சரி!
எல்லா சாமிகளும் நல்ல சாமிகள்தான்! நம்புங்கள்!
சாமியை விட சாமியாரை வெறித் தனமாக நம்பாதீர்கள்.
உண்மை சாமியார்களையும்; அண்மை சாமியார்களையும் அலசுங்கள்!

சொகுசு வாழ்க்கையும், சல்லாப வாழ்க்கையும், சாமியார்களுக்கு அழகா!
‘திடீர்’ சாமியார்களின் சொக்க வைக்கும் சொற்பொழிவுகளைக் கேட்டு
சொத்துக்களை இழந்து விடாதீர்கள்!
அரசியல் வித்தகர்களின் அடுக்கு மொழிகளைக் கேட்டு
இத்தனை காலம் ஏமாந்தது போதாதா!

காவி மட்டுமே போலியா!
வெள்ளை உடையிலும்,
மஞ்சள் உடையிலும்,
கறுப்பு உடையிலும்
போலிகளே இல்லையா

அகப்பட்ட சாமியார்களின்
அந்தரங்க லீலைகளை
படம் பிடித்து காட்டுவோரின்
சமுதாய அக்கறைகளும் போலிகளே!

ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள்!
சின்னத்திரையில் இல்லம்தோறும் நடுக்கூடத்தில்
சாமியார்களின் சல்லாபப் படம் ஒரு மாங்காய்!

ஒரு போலி சாமியாரைத் துகிலுரித்துக் காட்டி
ஒரு பகுத்தறிவுவாளராக தம்மை காட்டிக் கொண்டது
இரண்டாவது மாங்காய்!

எத்தனையோ நாட்கள்
எட்டி நின்று பார்த்து விட்டு
‘சட்’டென ஒரு நாள் படம் பிடித்துக் காட்டி
மக்களுக்கு வழிகாட்டும் மாபெரும் மீடியாவை
மஞ்சள் பத்திரிகையாக மாற்றியது மூன்றாவது மாங்காய்!

மக்கள் என்ன மாங்காய் மடையர்களா?
போலி சாமியார்களையும் மதிக்க மாட்டார்கள்!
இந்தியத் தொலைகாட்சிகளில் முதல்முறையாக
திரைமறைவு காட்சிகளை அரங்கேற்றிய
சின்னத்திரைகளையும் மதிக்க மாட்டார்கள்!!!


4 comments:

  1. அகப்பட்ட சாமியார்களின்
    அந்தரங்க லீலைகளை
    படம் பிடித்து காட்டுவோரின்
    சமுதாய அக்கறைகளும் போலிகளே!


    ...... well-said!

    ReplyDelete
  2. போலிகளை இனம் பிரித்து ஒதுக்குவது நம்மிடம் தான் இருக்கு.

    ReplyDelete
  3. Chira அக்கா நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..
    Lakshmi அம்மா ,இந்த உலகத்தில் எல்லாமே போலிதான் நாம யாக்கிரதைய இருந்தா ஓகே ... நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

    ReplyDelete