Welcome to our site.!!

Saturday, 19 March 2011

நண்பனின் அருகே 6 நாட்களாக காவலிருந்த நாய்.!

சரித்திரம் இதுவரை சந்திக்காத சோதனை ஜப்பானில் நிகழ்ந்திருக்கிறது.
சுனாமி பேரலையின்போது காயமடைந்த நாயொன்றின் அருகில் பிறிதொரு நாய் 6 நாட்களாக குளிரையும் பொருட்படுத்தாமல் காவல் இருந்த சம்பவம் வடகிழக்கு ஜப்பானிலுள்ள இபாரகி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நாயொன்று இடிபாடுகளின் கீழ் சிக்கி படுகாயமடைந்தது.

அந்நாயுடன் நட்புறவுடன் பழகிய பிறிதொரு நாய் சுனாமியால் அடித்துவரப்பட்ட மண் சகதியால் நனைந்த நிலையில் உயிர் தப்பியிருந்தது.இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த தனது நண்பனான நாயை கைவிட்டு செல்வதற்கு மனம் ஒப்பாமல் 6 நாட்களாக அதனருகே அதற்கு காவலாக இருந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாயை மீட்டனர்.
மேலும் காயமடைந்த நாயை அருகிலிருந்த மிருக வைத்தியசாலையொன்றுக்கு எடுத்துச் செல்லப்படும் வரை ஒரு மணி நேரமாக குறிப்பிட்ட நாய் அங்கிருந்து நகர மறுத்து காயமடைந்த நாயின் அருகிலேயே இருந்துள்ளது.

1 comment: