Welcome to our site.!!

Thursday, 24 February 2011

போட்டு உடைத்தார் மைனா இயக்குனர்..


எல்லாளன் படம் குறித்து பேசிய சேரன், ஈழப் போராட்டத்தின் இறுதி நேரத்தில் போர்க்களத்தில் புகுந்து நேரடியாக படம் பிடிக்கப்பட்ட படம்தான் எல்லாளன். இந்தியாவில் அப்படத்தை வெளியிட முடியாவிட்டாலும் உலகின் பல இடங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர வைத்திருக்கிறது. இந்த திரைப்பட விழாவில் அந்தப்படம் வெளியிடப்படுவது மிக முக்கியமான நிகழ்வு என்று கூறினார்.விஎஸ் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வருகிற ஏப்ரல் 20 முதல் 25 ந் தேதி வரை தமிழ் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் 


எந்திரன், 
அங்காடித் தெரு, 
களவாணி, 
மதராஸப்பட்டினம், 
ஆடுகளம், 
மைனா, 
பாஸ் என்கிற பாஸ்கரன், 
விண்ணை தாண்டி வருவாயா, 
யுத்தம் செய், 
தா, 
பயணம், 
தென்மேற்கு பருவக்காற்று, 
என் சுவாசம், 
செங்கடல், 
எல்லாளன்

ஆகிய படங்கள் போட்டியிடுகின்றன.இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சேரன், மிஷ்கின், வசந்தபாலன், ராஜேஷ்எம், சூரிய பிரபாகர், லீனா மணிமேகலை ஆகிய இயக்குனர்களும் கலந்து கொண்டார்கள்.
தமிழகத்திலிருக்கிற பத்திரிகையாளர்களுக்கு அந்த படத்தை பிரத்யேக காட்சியாக திரையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் செங்கடல் படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை.
ஒரு படம் முடிந்து ரிலீஸ் ஆகிற நேரத்தில் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் மனக்கசப்பு வந்துவிடுகிறது. நாம எதுக்கு செலவு பண்ணி சப் டைட்டில் போட்டு உலக பட விழாவுக்கு இந்த படத்தை அனுப்பனும்? அப்படி அனுப்பினாலும் பேர் வாங்கப் போறது டைரக்டர்தானேன்னு நிறைய தயாரிப்பாளர்கள் நினைக்கிறாங்க. இந்த காரணத்தால்தான் பல நல்ல படங்கள் பட விழாக்களில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது என்று உண்மையை போட்டு உடைத்தார் மைனா இயக்குனர் பிரபு சாலமன்.
சத்தியமான வார்த்தைகள். ஆனால் உண்மைக்கு எங்கே இருக்கிறது மரியாதை?

No comments:

Post a Comment