Welcome to our site.!!

Saturday, 26 February 2011

நாழிகையின் கைகூஸ்.

தெருவில் இளைஞ்சன்; ஜீன்ஸில் ஓட்டை
தைச்சுப் பிச்சதா
பிச்சுத் தைச்சதா?



போராளி மரணம்; செய்தி வந்தது
ஆர்வலர் கேட்டார்
அடிபட்டா பிடிபட்டா?


முக்கிய நபர் பிடிபட்டார் செய்தி
குழந்தை கேட்டது;
முக்கினால் குற்றமா?


பசித்து றோல்ஸ் வாங்கினேன்
வைத்திருந்தான்;
முன்னுக்கொண்டு பின்னுக்கொண்டு
இறைச்சி துண்டு


ஏமாற்றிவிட்ட முன்னாள் காதலி
அகதிக்கு எழுதினாள்
"தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்குதவாது"
ஏமாந்து போன அகதி எண்ணினான்;
"நீலநிற வான்கடிதம் வழங்கியது
வாழ்க்கையல்ல"


எயார்ப் போட்டிலிறங்கிய
ஊர்ப்பிள்ளை கேட்டாள்
" உங்கள் படம் வேராயிருந்ததே!"
மாப்பிளை சொன்னான்:
"கவலைப் படாதே வழுக்கை
வாழ்க்கையல்ல."

No comments:

Post a Comment