Welcome to our site.!!

Tuesday, 22 February 2011

என் தேசத்தின் புதுமைகள்

குளவியும் கிழவியும் ஒன்றாக 
புதைந்து போனது  
என் தேசத்தில் தான்.

மனிதனும் மாடுகளும் மண்ணோடு
மண்ணாகிப்  போனது
என் தேசத்தில் தான்.

நச்சுப்புகையும் நாகபாம்பும்
என் இனத்தை நாசம் செய்தது
என் தேசத்தில் தான்.

வெளிநாடுகளும்
வெள்ளைக்காரர்களும்
திருப்பிக்கூட பார்க்காதது
என் தேசத்தை தான்.

ஐரோப்பிய ஒன்றியமும்
ஐநா சபையும்
கைகட்டி வேடிக்கை பார்த்ததும்
என் தேசத்தை தான்.

அயல்நாடுகளும்
அன்னிய படைகளும் 
ஆயுதம்  தரித்ததும் 
என் தேசத்தில் தான்.

மூதூரிலும் 
முள்ளி வாய்க்காலிலும் 
முழு மண்ணும் இரத்தத்தால் 
நனைந்ததும் 
என் தேசத்தில் தான்.   

No comments:

Post a Comment