Welcome to our site.!!

Monday, 21 February 2011

மடிந்து விட்டாள் மானத்தாய்

மண்ணுக்கு ஒர் மாவீரனை
மனம் உவந்து ஈன்றவளே

மாறிடுமோ எம் சோகம் - உன்னை
மலர்தூவி வாழ்த்துவதால்

மாற்றானை கொன்றொளித்த
மாவீரன் உந்தன் மகன்
மறைந்திருந்து மெளனிப்பதேன் ?
மனம்விட்டு கதறாமல்


மனித உருவில் பிறந்ததனால்
மகிந்தவும் வணங்கி உனை
மன்னிப்பும் கேட்க வேண்டும்


மக்கள் பிள்ளை துணையின்றி
மருத்துவ மனையில் உனை
மறித்து வைத்துவிட்டார்
மனக்கோட்டை கட்டித்தானோ


எதற்கு ???


மாவீரன் தாய் அவள்
மாண்டுவிட்டால் இம் மண்னில்
மண்ணுக்கும் விடிவு கிட்டும்
மன்னிப்பு கிடைத்துவிடும்...


மகிந்த அன் கொம்பனியின்
மாஸ்ரர் பிளான் இது தானோ


மாபெரும் தாய் இவள்
மரணத்தை தழுவிகொண்டாள்
மக்களின் மனங்களையெல்லாம்
மாறா துயரில் ஆழ்த்திவிட்டு


மரணித்தும் மன்றாடுகிறாள்
மக்களின் விடிவை நோக்கி
-நாழிகை

No comments:

Post a Comment