Welcome to our site.!!

Friday, 18 February 2011

என்றென்றும் நினைவில் இருக்கும் என் கிராமத்து நண்பர்கள்



என் கிராமத்து நண்பர்கள்
நீ பெரியவன்
நான் பெரியவன்
என்ற வேறுபாடு  இல்லை
வெண்ணிற வானமும் 
செந்நிற மணல்பரப்பும் தான்
நம் எல்லை  கோடுகள் . 


அரைக்கால் கால்சட்டையும்
அழுக்கான மேல்சட்டையும் தான்
நம்முடைய சீருடைகள் 
காலை முதல் மாலை வரை
ஊரை சுற்றி வரும்
கழுகு கூட்டம் நாம்.   

காற்றாய் பறந்து திரிந்த காலம் 
பம்பரமாய் சுத்தி திரிந்த காலம்
பசித்தாலும் துடுப்பு மட்டையை 
 கைவிடாத விளையாட்டு தனம்
நக்கல்கள்,பகிடிகள் என்று நட்புடன்
வாழ்ந்த நட்பு உலகம்.

கிழவன் கிழவிஎன்றால் நாம்
வம்பிழுக்க தவறியதில்லை 
இருந்தும் வயதுக்கு மரியாதை
கொடுக்க மறக்கவில்லை.

ஆனால்  இன்றோ
அன்று  இருந்த நண்பர்கள்
இன்று இல்லை
விளையாடி திரிந்த மைதானங்கள்
பற்றை மேடுகள்
பல கதைகள் கதைத்த இடங்கள் 
என்று வெறுமையுடன் நம்
கதையை சொல்லி பாடுகின்றன.

இனி கிடைக்காத அந்த இனிய 
நண்பர்களை, நாட்களை நினைத்து தான்
வெறுமையுடன்  நகர்கிறது
என் இன்றைய நாட்கள்.

No comments:

Post a Comment