Welcome to our site.!!

Wednesday, 16 February 2011

**பாரதி காணா புதுமை பெண் **

பாவையரே பாரும்
பாரதியின் பாவச் செயலை

பாவாடை தாவணியில்
பகலெல்லாம் பாரினில் பவனிவரத்தானே
பாடுபட்டு பறித்தெடுத்தான்
பாவையே உனக்கோர்சுதந்திரம்
-


பாவாடை பறக்கவிட்டும்
பார்த்தவரை பல் இழித்தும்
பள்சரிலே பறக்கின்றாய்
பார்பவர் மனதில் எல்லாம்
பவ்வியத்தை இழந்துவிட்டு


பணத்துக்காய் பாய்விரித்தாய்
பணக்காரன் பாவிக்கின்றான்
பாவி அவனல்ல பாவம் என்செய்வான்
பக்குவம் தெரிந்திருந்தும்
பரதேசி நீயல்லவோ??


பக்குவப் பட்டுவிட்டீர்
பரிந்துரைத்து என்ன பயன்


பாரதம் மீதினிலே
பண் இசைவாய் பாட்டமைத்தான்
பஞ்சு பஞ்சாய் நெஞ்சமெல்லாம்
பருதவிக்க பறக்கின்றதே


பாரதியாய் நான் இருந்தால்
பாத்துவிட்டே செத்திருப்பேன்
பைத்தியகார பாரதியவன்
பார்த்த வேலை தான் கண்டீர் ...........


பாவம் தம்பி நீர் இனிமேல்
படிப்பை கொஞ்சம் கவனிப்பீரோ ???

கவிஞர் கபிலன்

No comments:

Post a Comment