Welcome to our site.!!

Monday, 14 February 2011

கபிலனின் காதலர் தின ஏக்கம்


காதல் என்று எண்ணி கன்னியின்
கவர்ச்சி வலைக்குள் மாட்டிடாதே நண்பா
காதலின் தேவைஅல்ல அது
காலத்தின் தேவை lol


...கால ஓட்டம் -- ஏன் ??
கண்ணிமைக்கும் நேரத்திலே
கச்சிதமாய் உனக்கோர் செய்தி
காத்திருக்கு கசப்பாகவே


கண்ணே என்று உன்னை அழைக்க - ஒரு
காலம் வருமோ என்னை அணைக்க ( என )


காற்றோடு கலந்து நிக்கும் நம் தேச
காதல் வரிகளால் உயிர் பிழிந்து ஊற்று - உன்
காத்திருப்புகள் காதலை வாழவைக்கும் ........


காதல் பூக்கள் எங்கும் மலரட்டும்
காவியம் எழுதுவதாய் இருக்கட்டும்
கல்லறையில் விழுவதென்றால்
கர்ப்பத்திலே கலைந்து விடட்டும்


பிறந்து இறந்த குழந்தயாய் இல்லாமல்
இறந்து பிறந்த குழந்தயாய் இருக்கட்டும்
நினைவுகள் உன் நிம்மதியை கெடுத்துவிடும்


காத்திரு கொன்சம் பாத்திரு - உன்
கனவு தேவதை அதோ வருகிறாள் தூரத்திலே..........

காதலர் தினத்துக்காய் -கபிலன்

No comments:

Post a Comment