Welcome to our site.!!

Tuesday, 8 February 2011

மாரடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லாமல் தீர்வு

இரத்தக் குழாயில் இருக்கும் அடைப்பை 'மினி குண்டு கொழுப்பு' மூலம் தகர்க்கும் அதி நவீன லேசர் சிகிச்சை முறையினை   பிரித்தானிய  
ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். உடலின் அதிகப்படியான கொழுப்பு இரத்த நாளங்களில் படிவதால்  இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
கவனிக்காமல் விட்டால் மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு உயிரை பறிக்கும் அபாயமும்   உள்ளது. இவர்களுக்கு 'பைபாஸ் சேர்ஜரி'
என்ற அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருந்தது.ஆனல் தற்பொழுது சத்திரசிகிச்சை இல்லாமல் இரத்த நாளா அடைப்புகளை சரி செய்யும் வகையில் அதி நவீன 'லேசர்  சிகிச்சை' முறையை லண்டன்
பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டாக்டர் ஜோ ப்ரூக்ஸ் தலைமையில்  இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது. கண் சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் 'எக் சைமர் லேசர் ' வகை இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.'கதீட்டர்'  எனப்படும் மிக நுண்ணிய குழாய்   எக்சைமர்   லேசர் கருவியுடன் பொருத்தப்படும்.இது இரத்த நாளங்களுடன்     இணைக்கப்பட்டு இரத்த அழுத்தத்தை 
அதிகரிக்கும்.அதிக  அழுத்தத்துடன் சீறி பாயும் இரத்தத்துடன்  லேசரும் செலுத்தப்படும்.எது இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை வெடிக்க செய்து தகர்த்துகிறது.வெடித்து சிதறும் கழிவுகள் நுண்ணிய துகள்களாகி இரத்த ஓட்டத்தில் கலந்து இரத்த குழாய்கள் மூலமாக வெளியேறிவிடும்.சத்திரசிகிச்சை மூலம் உடலின் ஒரு பகுதியில்உள்ள அடைப்பை மட்டுமே நீக்க முடியும்  .ஆனால் லேசர்  முறையில் உடலின் அந்த பகுதியில் இருக்கும் அடைப்பையும் நீக்கலாம் என்கிறார் தலைமை டாக்டர் ஜோ.லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையின் கடந்த யூலையில் சோதனை அடிப்படையில் இரண்டு பேருக்கு லேசர் முறையில் இறந்த நாலா அடைப்புகள் நீக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. விவரம் தந்தமைக்கு எங்கள் இதயப்பூர்வமான நன்றி

    ReplyDelete