Welcome to our site.!!

Saturday, 1 January 2011

கண்ணீருக்குத் தேவையிருப்பதால்..


இரவே !
தாரகைகளே !
தெருக்களே !
முகில்களே !
அவளுக்கு சொல்லுங்கள் ,
எம்மிடம் விடையில்லை.
கண்ணீரை  ,சோகத்தை ,
கஷ்டங்களை விட
பெரியது காயம் .
உண்மையை
நீ தாங்க மாட்டாய் .
ஏனெனில்  உனது
மகன் இறந்து விட்டான் .
தாயே !!
கண்ணீரை முடித்து விடாதே ,
கண்ணீருக்குத்
தேவை இருப்பதால் .....


-மஹ்மூட் தர்விஸ் -

No comments:

Post a Comment