Welcome to our site.!!

Saturday, 1 January 2011

கொஞ்சம் சிரிக்க..

"தர்பாரில் நம்முடைய மன்னரின் பாலே நடனம் அருமையாக உள்ளதே !"
"நீ வேற ! பண்ணபுரத்து  மன்னன் படை எடுத்து வருவதாகச் சொன்ன உடனே மன்னரின்  பேஸ்மட்டம் ஆடுகிறது !"
"சார் உங்களுக்கு மணியார்டர் பண்ணியிருக்காங்க !"
"எவண்டா அவன் மணி ? எனக்கு ஆர்டர் போடுறது ?"



"உங்க வீட்ல எப்பவும் சிரிப்புச் சத்தம் கேக்குதே..
அவ்வளவு சந்தோசமா ?
என் மனைவி என் மேல பாத்திரத்தை தூக்கிப் போடுவா.
என் மேல படலைன்னா நான் சிரிப்பேன். பட்டுச்சுன்ன அவ சிரிப்பா !"


"மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை என்று அறிவித்துவிடலாமா, மன்னா ?"
"வேண்டாம்....அவ்வளவு தைரியமனவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்ளுங்கள் !"



தந்தை  : நான் உன்னை அடிச்சா உன் கோவத்தை எப்படிக் கட்டுப்படுத்துவே ?"
மகன்    :டூத் ப்ரஷ்ஷால டாய்லெட்டைச் சுத்தம் பண்ணுவேன் !"
தந்தை :அதனால எப்படிக் கோவம் கட்டுப்படும் ?"
மகன்   :ஹி.....ஹி.....ஹி அது உங்க பிரஷ் ஆச்சே !

No comments:

Post a Comment