Welcome to our site.!!

Saturday, 1 January 2011

சொல்ல முடிந்த ஒரு உண்மைக் கதை- அம்பேபுஸ புனர்வாழ்வு முகாம்


என்னுடன் பேசிக்கொண்டிருந்த சுமார் 50 க்குமேலான நிமிடங்களில்
ஒரேயொரு தடவை தான் அந்த சிறுவன் சிரித்தான். அன்றி அவன் பதற்றமோ அல்லது அதையும் மறைக்கவுமோ  முயலவில்லை. ஒரு வேளை  அவனது வாழ்வு அவனுக்கு சிரிப்பு எதனையும் விட்டுவைக்காத போது,நேர்மையான தோற்றமாகவும் அது இருக்கலாம். பதினெட்டு வயதான கணேசலிங்கம் தயாளனை தமிழீழ விடுதலைப்புலிகள் தம்முடன்  சேர்த்துக்கொண்ட போதுஅவனுக்கு வயது  12 மட்டுமே. நான்கு ஆண்டுகளுக்கு  பிறகு அவன் ஒரு கரும்புலியாக பதவி உயர்ந்த போது தேசியத் தலைவர் பிரபாகரன் 
அவர்களுக்காகவும்  தமிழ் ஈழத்துக்காகவும் தனது உயிரை துறக்க சபதம் எடுத்தான். 

கடந்த மூன்று தசாப்தங்களில் ஒரு பல இலட்சம் பேர்களை பலிகொண்ட உரிமையுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான  ஆனால் ஒருசிலர்  மட்டுமே
உயிருடன் தயாளன்கள்     இருந்திருக்கலாம்
வாழ்ந்து தமது கதைகளை சொல்லும் விதத்தில் தம்மை விடுவித்து வெளியே வரும் வாய்ப்பையும் துணிச்சலையும் பெற்றார்கள்.
எனினும் தயாளன் துயரம் நிறைந்த ஒரு தனித்துவமாகத்தான் இன்னமும்
தெரிகிறான். வவுனியாவில்  இருந்து   4 கி .மீ தொலைவில் உள்ள
தமது பண்டாரிக்குளம் கிராமம் மீது இராணுவம்  செல் தாக்குதலுக்கு
உள்ளன போது அவனின் பெற்றோர்கள் இருவருமே அந்த செல் தாக்குதில்
இறந்து போக தனது இரண்டு வயதில் அனாதையாகி நின்றதில் இருந்து இன்று வரை அவனது சோகம் அவனை விட்டு மறையவில்லை.
சில வருடங்கள் அவனது அம்மம்மா அவனை வளர்த்துவந்தார்.பின்னர் விடுதலைப்புலிகள் பொறுப்பேற்று செஞ்சோலை அனாதைகள் இல்லத்தில் சேர்த்து பத்து வருடங்கள் அங்கு மற்றைய சிறுவர்களுடன் கல்வி கற்று இருந்த சமயம் அவனுக்கு கடமைக்கான அழைப்பு  வந்தது
புலிகளிடம்  இருந்து. அவன் மேலும் கூறியதாவது,

"நான் தொடக்கத்தில் மன்னாரில் புலனாய்வு பிரிவில் அமர்த்தப்பட்டேன்.
பின்னர் ஆண்டு டிசம்பரில்மன்னர் நாச்சிக்குடா யுத்தத்தில்   நேரடியாக ஈடுபட்டேன்.பின்னர் புலிகள் மன்னாரில் இருந்து வன்னிக்கு வாபஸ் ஆகி நகர ஆரம்பித்ததும் நான் கைகளிலும் 
கால்களிலும்  காயமுற்றேன் ". என்று கொழும்பில இருந்து
60 கி.மீ தொலைவில் உள்ளஅம்பேபுஸஎன்னும் இடத்தில் அமைந்திருக்கும் 
முன்ளாள் போராளிகள்   சிறுவர்கள் புனர்வாழ்வு நிலையத்தின்
வெறுமையான ஒரு வகுப்பறையில் இருந்து இவற்றை இணைவு கூர்ந்தான் .
மேலும் அவன்கூறியதாவது கரும்புலிகளுக்கு வகுப்புகளை நடத்திய
அச்சுதன் மாஸ்டர் தற்கொலை படையில் நான் சேர்ந்து கொள்வதுக்கு
உதவியாக இருந்தார்.குழந்தையாக எனது  பெற்றோர்களை இழந்த
எனக்கு குடும்ப பாசம் பற்றி தெரிந்து  இருக்கவில்லை. கரும்புலிகளுக்கான வகுப்பில் மனத் தைரியத்தை வளர்க்கும்
விதமாக தியானம், யோகாசனம் ஆகியவற்றையும்   கொண்டிருந்தன. ஒரு கரும்பிளியகி மாறி இலட்சியத்துக்காக உயிரை தியாகம் செய்ய தயாராகியதில்நான் பெருமைப்படுகின்றேன். என்று சொல்லி முடித்ததும் அவனது கண்கள் மங்க தொடங்கின.

ஜனவரியில் கரும்புலியில் அவன் சேர்க்கப்பட்ட பொது நாலு மாதங்களின் பின் அவனது G.C.E சாதாரண  பரீட்சை முடிவுகள் வந்தன. ஒரு தற்கொலை குண்டுதாரியோ அல்லது புலனாய்வு பிரிவில் செயற்படும் ஒருவரோ போது மக்களிடையே பழகுவது முக்கியமானது என்பதால் மன்னார்  பாடசாலையில்அந்த சிறுவனை விடுதலை புலிகள் சேர்க்க விரும்பினர் அனினும் அவனது பரீட்சை முடிவுகள் அவனை குழப்பின.தாக்குதலுக்கு சென்ற நண்பர்கள் திரும்பிவராத போது அவனது மனது  ஆட்டம் கண்டது. அவன் G.C.E சாதாரண  பரிட்சையில் பத்து பாடங்களில் ஆறு பாடங்களில் ஏ (75-100) தரத்தை பெற்றான்.இதனால் அவனது ஈழ கனவு ஆட்டம் கண்டது.தனக்குள்  நான் சாவது நன்மையா என்று  எண்ணினான் . பின்னர் தயாளன் வவுனியா மத்திய மகா வித்தியாலத்தில் சேர்ந்தான். படித்துகொண்டிருக்கும் போது  ஜூன் 2008  இல் ஒரு இலக்கை நீர்மூலமாக்குவது என்பது பற்றிய  யிற்சி  முடிந்து தாக்குதலுக்கான அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு பணிக்கப்பட்டான்.  

சாதாரண மாணவனை போல பாசாங்கு செய்து கொண்டு பாடசாலை கிரிக்கெட் குழுவில் என எல்லா துறைகளிலும் ஆற்றல் பெற்று திறமையான வீரனாக விளங்கிய போது அவனது ஒரு திடமான நடத்தை இலங்கை பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி ஒரு நாள்  அவனது பாடசாலைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட இலங்கை புலனாய்வு பிரிவினரால்  சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவனது கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பியையும் சேட்டின் உள்ள இருந்த பிஸ்டல் துப்பாக்கியையும் போலீசார் கண்டு பிடித்தனர்.அதன் பிறகு கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு கொண்டு வரப்பட்டு விசராணை  நடந்த பின்னர் எந்த புனர் வாழ்வு நிலையத்துக்கு மாற்றபட்டான். மேலும் தயாளன் எம்மிடம் கூறியது." எனக்கு என்னும் ஆறு மாதங்கள் இருக்கு அதன் பின் விடுவிக்கபடுவேன் என்றே நானும் நம்புகிறேன்.நான் தொடர்ந்து படிக்கவேண்டும் அனேகமாக  பொறியியல் துறையில் படிக்கலாம் என்று எண்ணுகிறேன் .மற்றயவர்கள் திரும்பி செல்ல பெற்றோர்கள் இருக்கிறார்கள் வீடும் இருக்கு எனக்கு ஒன்றும் இல்லை நீங்கள் எனக்காக வீடு பார்ப்பீர்களா என்று கேட்டுவிட்டு ஒருமணி நேரத்துக்கு பின் தயாளன் முதன் முதலாக சிரித்தான்.பின்னரும் அந்த சிறுவனில் சோகமே படர்ந்துகொண்டது.

3 comments:

  1. நெஞ்சை வருடுகிறது உண்மைக்கதை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. யாதவன் ஆயிரம் கதைகளில் இதுவும் ஒன்று உங்கள் கருத்துக்கும் எங்கள் தளத்துக்கு வருகை தந்ததுக்கும் நன்றி

    ReplyDelete