Welcome to our site.!!

Saturday, 29 January 2011

போராளி முத்துக்குமார் 2ம் நினைவு தினம்.உயிராயுதம் ஏந்திய மாவீரனுக்கு எமது வீர வணக்கம்.
தை 29 இன்று போராளி முத்துக்குமார் 2ம் நினைவு நிகழ்வில் உணர்வெளிர்ச்சியுடன் கலந்து கொண்ட மக்கள் ஒரு பகுதியினரின் புகைப்படங்கள்.

Friday, 28 January 2011

யாழ்ப்பாணத்து படித்த குடிமகன்கள்நாலு இளைய தலைமுறைக்கு நல் வழி காட்டுகின்ற  யாழ் பல்கலைக் கழக சமுகமே இந்த நிலை என்றால் பாடசாலை மாணவர்கள் சாதரணமான மக்கள் எல்லாம் எந்த நிலையில் இருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். வீடியோ வை  பாருங்கள் அதில் ஒருவர் தான் ஒரு கரிகரன் எண்ணத்தோட பாட (கத்த)  அவர் டா பாட்டுக்கு மற்ற குடி வீரர்கள் கிழடுகள் கிழவிகள் குஞ்சுகள் எல்லாம் நடனம் ஆட என்ன கொடுமை இது சகிக்கல. கட்டைல நாளைக்கு போக போற வயதிலையும் அந்த கிழட்டுக்கு  ஆட்டம் வேற கேக்குது அது சரி ஆசை யாரைத்தான் விட்டு வைச்சது .எல்லா மாடும் ஓடுது எண்டு பொன்னமாண்ட  பேத்த கண்டும் ஓடிசாம் அப்படி இருக்கு இவர்களின் கூத்துகளை பார்க்க.

Wednesday, 26 January 2011

நாழிகையின் தேடல்களில்

மனிதா!!  நீ கை ரேகையை கணித்து வாழ்க்கையை வாழ்ந்து விடாதே கையில்லாதவனுக்கும் வாழ்க்கை உண்டு மறந்து விடாதேஉலகின் நீளமான கால்களை   உடைய பெண்  


கால்களுக்கிடையே பட்டாம் பூச்சி

Monday, 24 January 2011

இது காலத்தின் சாபமா


தாய் விட்டு தாயகம் விட்டு
ஊர் பெயர் தெரியாத இடங்களில்
அனாதைப் பிள்ளைகளாய்.........

தாயின் அரவணைப்பின்றி
தனிமையில் தத்தளிக்கையிலே
தாய் கரத்தின் தக்காளி கறியும்
தங்கமாய் தானே தெரிகின்றது

சோக மழை என் மனதில்
சோ என சூறாவளியுடன்
கனமழையாக வெறித்து பெய்கிறது.
வெள்ள அனர்த நிவாரணமாம்
என்தாயின் ஆறுதல் பேச்சு

ஆர்பரிக்கும் அன்பு கட்டளைகளால்
அடுத்த தாக்குதலுக்கு தயார் நிலையில் ....

மாற்றம் ஒன்ற சொல்லே
மண்ணில் மாறாத ஒன்றாம் - அதனால்
மன்றாடுகிறேன் மறுபடியும் ஒரு மாற்றத்துக்காய்.........

இது
காலத்தின் சாபமா
கனவுகளின் தாகமா- என்
கண்ணீருக்கு வந்த கோபமா ??????????


- கபிலன்.

இந்த cup யாருக்கு..?

                                                          2011 கிரிக்கெட் போட்டி அட்டவணை 

 

MatchDateTeamsVenue
119 FebIndia vs Bangladesh Dhaka
220 FebNew Zealand vs Kenya Chennai
320 FebSri Lanka vs Canada Hambantota
421 FebAustralia vs Zimbabwe Ahmedabad
522 FebEngland vs Netherlands Nagpur
623 FebPakistan vs Kenya Hambantota
724 FebSouth Africa vs West Indies New Delhi
825 FebAustralia vs New Zealand Nagpur
925 FebBangladesh vs Ireland Dhaka
1026 FebSri Lanka vs Pakistan Colombo
1127 FebIndia vs England Kolkata
1228 FebWest Indies vs Netherlands New Delhi
1328 FebZimbabwe vs Canada Nagpur
141 MarSri Lanka vs Kenya Colombo
152 MarEngland vs Ireland Bangalore
163 MarSouth Africa vs Netherlands Mohali
173 MarPakistan vs Canada Colombo
184 MarNew Zealand vs Zimbabwe Ahmedabad
194 MarBangladesh vs West Indies Dhaka
205 MarSri Lanka vs Australia Colombo
216 MarIndia vs Ireland Bangalore
226 MarEngland vs South Africa Chennai
237 MarKenya vs Canada New Delhi
248 MarPakistan vs New Zealand Pallekelle
259 MarIndia vs Netherlands New Delhi
2610 MarSri Lanka vs Zimbabwe Pallekelle
2711 MarWest Indies vs Ireland Mohali
2811 MarBangladesh vs England Chittagong
2912 MarIndia vs South Africa Nagpur
3013 MarNew Zealand vs Canada Mumbai
3113 MarAustralia vs Kenya Bangalore
3214 MarPakistan vs Zimbabwe Pallekelle
3314 MarBangladesh vs Netherlands Chittagong
3415 MarSouth Africa vs Ireland Kolkata
3516 MarAustralia vs Canada Bangalore
3617 MarEngland vs West Indies Chennai
3718 MarSri Lanka vs New Zealand Mumbai
3818 MarIreland vs Netherlands Kolkata
3919 MarAustralia vs Pakistan Colombo
4019 MarBangladesh vs South Africa Dhaka
4120 MarZimbabwe vs Kenya Kolkata
4220 MarIndia vs West Indies Chennai
4323 MarFirst QuarterfinalDhaka
4424 MarSecond QuarterfinalColombo
4525 MarThird QuarterfinalDhaka
4626 MarFourth QuarterfinalAhmedabad
4729 MarFirst SemifinalColombo
4830 MarSecond SemifinalMohali
4902 AprFINALMumbai

Friday, 21 January 2011

கணினியின் வேகத்தை அதிகரிக்கவும்,தேவையற்ற கோப்புகளை அழிக்கவும்


BleachBit என்ற மென்பொருளை நம் கணினியின் வன்வட்டு (Hard disk) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை (temporary files) தேடிப்பிடித்து அழிப்பதற்கு பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (Operating System) பயன்படுத்தலாம். உங்களது நெருப்புநரி உலவி (Firefox browser) யின் வேகத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்க Bleachbit ஐ உபயோகிக்கலாம்.

இணைய உலவியில் நாம் விட்டுச் சென்ற தடயங்கள் (Traces), வரலாறு, குக்கீஸ் (Cookies) போன்றவற்றை இந்த மென்பொருள் நொடிப்பொழுதில் அழித்துவிடும்.

பையர்பாக்ஸ் முதல் கூகிள் குரோம் வரை எல்லா உலவிகளுடன் (Browser) ஒத்திசைவு கொண்டது இது. அடோபி ரீடர், அடோபி பிளாஷ், கூகிள் எர்த், ஜாவா, ஓபன் ஆபிஸ், ஸ்கைப் போன்ற 80 + பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை அடையாளம் கண்டு அழிக்க வல்லது.

கைகளில் ஓர் கிராபிக்ஸ் வித்தை.

கம்யூட்டர் கிராபிக்ஸ் சாப்ட்வேர்களால் மட்டும் தான், அனிமேஷன் காட்சிகளை மிக மிக அழகாக உருவாக்க முடியும் என்றில்லை. கைகளால் வரைந்த ஓவியங்களை Motion reel முறையில் அடுத்தடுத்து வேகமாக அடுக்கி பிண்ணப்பட்டிருக்கும் அசையும் அனிமேஷன் காட்சி இது.சிங்கப்பூரில் கிராபிக்ஸ் டிசைனிங் படிக்கும், Saggyyarmpit எனும் பெண்மணியின் வித்தியாசமான ஐடியாவால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிக வரவேற்பை பெற்ற அனிமேஷன்களில் இதுவும் ஒன்று!

Wednesday, 19 January 2011

காதல் வலி

கண்ணகள் கலங்கினாலும்
கனவுகள் கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும்
உள்ளம் சிரிப்பதில்லை
கண்மணி உன் மனதில்
நான் இல்லாவிட்டலும்
என் மனதில் நீயேவாழ்கிறாய்.

ஒரு கையில் சிகரெட்
மறு கையில் மது
கொஞ்சம் புகைத்து
அதிகம் குடித்து
தள்ளாடி விழும்
தருணங்களில் கூட
கொட்டிவிட மறுக்கிறது
உன் நினைவுகள் !

வறுமையே வாழ்க்கையானால்

பள்ளி பருவத்தில் ஓடி திரிந்தேன்
நாலுபேருடன் கூடி கதைத்தேன்
தாயின் பாசத்தில் என்னை மறந்தேன்
தந்தையின் கண்டிப்பில்   கடுப்பானேன்
படியடா தம்பி என்றார்  தந்தையார்
நானோ பட்டம் விட்டு திரிந்தேன்
பகிடி விட்டு திரிந்தேன்
காலம் சில சென்றன வயதும் சில கூடின
எதிர்காலம் வாழ்க்கையை  எண்ணி பார்த்தேன்    
வெளிநாடு வந்தேன் வாழ்க்கையே மாறியது
கொட்டும் பனியிலும் கடும் குளிரிலும்
வறுமை என்னை வாட்டுகிறது
தனிமை என்னை தொடர்கிறது
சொந்தங்கள் பல இருந்தும் பரதேசி ஆனேன் 
பணம் தான் வாழ்க்கை என்பதால் பன்னாடையானேன் 
வறுமை வயலில் உழுது கொண்டிருக்கிறேன்
வாடின மலராய் கசங்கி கொண்டிருக்கிறேன்
நாளைய வாழ்வின் விடிவை எண்ணி...

எழுதி கிழித்தது.01

இரவின் மடியில்.
நானும் நீயும் அமர்ந்து,
மெல்ல வருடும் காற்று,
இதமான உன் சுவாசம்,
பரிமாறிய முத்தங்கள்,
மேகங்கள் இடையே வெட்கப்பட்டு,
வேவு பார்க்கும் நிலவு,
கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்,
வழக்கம் போல,
திறந்து வைத்த யன்னலின் வழியே...!
நாமும் ரசித்தோம்,அவையும் ரசித்தன..!!

சில fun மொழிகள்.

*ஆயிரம் பொய்
சொல்லியாவது
டைவர்ஸ் பண்ணு.
*காதலித்து தொட்டவனுக்கு
ஒரு நாள் அழுகை
காதலித்து கல்யாணம் பண்ணினவனுக்கு
காலம்பூரா அழுகை.
*டவர் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்.
*மிஸ்டு கால் பார்ட்டியை விட மொக்கை மெசேஜ்
அனுப்புபவன் மேல்.
*ஜீன்ஸ் ஆனாலும் துவைத்துப் போடு.
பீட்ஸா,பர்கர் ஆனாலும் பல் விளக்கி தின்னு.
*ஓட முடியாதவனுக்கு finance கம்பனி எதற்கு?
*Balance இல்லாத cell வெறும் செங்கல்.
*டாஸ்மாக் முன் நின்று மோர் குடித்தாலும்
பீர் குடித்ததாகத்தான் உலகம் சொல்லும்.

Monday, 17 January 2011

மீண்டும் காமசூத்ரா வைரஸ்: கம்ப்யூட்டர் பைல்கள் ஜாக்கிரதை

கம்ப்யூட்டர்களின் செயல்பாடுகளை திறன் இழக்கச் செய்யும், காமசூத்ரா வைரஸ் கிருமி ஆனது தற்போது, Real kamasutra.pps.exe என்ற பெயரில் மீண்டும் களம் இறங்கியுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு, கம்ப்யூட்டர் உலகில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட வைரஸ், காமசூத்ரா வைரஸ்.
அச்சமயம், காமசூத்ரா என்றழைக்கப்பட்ட இந்த வைரஸ் கிருமிகளினால், ஏராளமான கம்ப்யூட்டகளின் செயல்பாடுகள் அனைத்தும் திறன் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அது போன்ற வைரஸ் கிருமியானது மீண்டும் அதே பெயரில் வந்துள்ளதாக, அத்துறை வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போது வந்துள்ள வைரஸ் கிருமியாது, "Real kamasutra.pps.exe" என்ற பெயரில் களம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது போன்ற வைரஸ் கிருமிகள், பெரும்பாலும் டவுன்லோடு செய்யும் பைல்களையே அழிக்கின்றது. மேலும், தனிப்பட்ட பைல்களையும் அழிக்கக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு என்றும் வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சனையைத் தீர்க்க, கம்ப்யூட்டரில் இது போன்ற வைரஸ் கிருமிகளை அழிக்கக் கூடிய சாப்ட்வேர்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும் தங்கள் ரெஜிஸ்டரியில் காணப்படும் வைரஸ்களையும் அழித்து விட வேண்டும் என்றும், இத்துறை வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Sunday, 16 January 2011

விவசாயத் தோழன் பொங்கல்..

கணினி நிறுவனங்களின்
வாசல்களில்
மின் விளக்கு அடுப்பில்
தெர்மாகோல் பொங்கல்
'Happy Pongal" வாசகங்களுடன்.

பொங்கலின் பொருள் தெரியா
கழுத்துப் பட்டை
மென் பொறியாளர்களுக்கு
மின்னஞ்சல் உதடுகள்
காதலியரிடமிருந்து.

நாளை விடுமுறை
ஏதோ some பொங்கலாம்
ஈ.சி.ஆர் போலாமா
கொஞ்சலுடன் பேசிக்கொண்டன
சாட் அறைகள்.

நாளைக்கு பொங்கலா ?
அப்போ
சன் டிவியிலே என்ன படம் ?
சாய்வாய் அமர்ந்து
ரிமோட் திருகும்
குடியிருப்பு வாசிகள்.

பேட்டிகளின் திணிப்பால்
'கோலங்கள்' பார்க்க முடியாத
பதட்டத்தில்
வீட்டு அம்மாக்கள்.

பொங்கலுக்கு
இரண்டு நாள் லீவில்
ஊருக்கு போகும் ஆசையுடன்
தூரத்து பணியாளன்.

தமிழன்
'எப்போது பொங்குவான்
தன் நிலைகண்டு'
பட்டிமன்றங்கள் பொதிகையில்.

ரங்கநாதன் தெருக்களிலும்
பிட்சா கார்னர்களிலும்
நகைக்கடைகளிலும்
கொடிகட்டிப் பறக்கும்
விடுமுறை வருமானம்

வலிகளின் வரவால்
எலிகளைத் தின்று
வளைகளில் வாடும்
விவசாயத் தோழன் மட்டும்
கடன் வாங்கிப் பொங்குகிறான்
பொங்கல்..

Saturday, 15 January 2011

மீண்டும் எழுவோம்.

பலம் சில கொண்டு
களம் பல கண்டு 
தளம் பல வென்ற-வேங்கைகள் நாளினை 
வளம் பல பெற்று 
புலம் தனில் வாழும் தமிழர்கள் நாம் - எம்
தளம் தனில் இன்று சுடைதனை ஏற்றி -எம்
குளம் தனைக் காத்த மாவீரரை வணங்கி -சுய
நலம் தனைக் கடந்து பொது நலம் தனைக்
கொண்டு
புலம் தனில் உள்ளோர் - மீண்டும்
பலம் தனைக் பெற்றால்!
இளம் தலை முறையின் இனிய வழிகாட்டலில்
இழந்ததை பெறலாம் நாம்
இழந்ததை பெறலாம்
பளம் கதை போதும் - இனிக்
பளம் கதை போதும்
கலம் கொண்டு தாக்க
கலம் இப்போது இல்லை
பலம் கொண்டு தாக்க -போர்க்
களம் கூட இல்லை
வலம் வரும் உலகை
புலன் கொண்டு பார்த்தால்!
பலன் ஒன்று கிடைக்கும் 
புலம் தனில் நாங்கள்
பலம் தனைப் பெற்று
நிலம் தனைப் மீட்போம் -நாம்
இழந்ததை மீட்போம் - தமிழ்!
ஈழத்தை அமைப்போம் !
தமிழ் ஈழத்தை அமைப்போம்!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

புலிகள் பதுங்கினால் நரிகளின் ஆட்டம்.

"புலிகள் கொஞ்சம் பதுங்கும்  போது  நரிகள் ஆட்டம் போடுமே  நரிகள் வேசம் கலையும் போது புலிகள் வென்று காட்டுமே" என்று தம்பி அர்ஜுனா படத்தில்  இருந்து அண்மையில் ஒரு பாடலை கேட்க  முடிந்தது. ஒரு மந்திரவாதி பூனைக்கு பயந்து நடுங்கிய எலி  மேல் பரிதாவப்பட்டு அதை புலியாக  மாத்தி  விட்டாராம்  . பூனையை கண்டாலே பயந்து நடுங்குகின்ற எலி புலியாக  மாறின தெனாவெட்டில   ஓடியாடி தெரிஞ்சதாம். அனால் ஒரு நாள் புலியாக மாறி இருந்த எலி தலை தெறிக்க தப்பி ஓடி வந்திச்சாம்.மூச்சிரைக்க ஓடிவந்த பு(எ)லியுடன் மந்திரவாதி கேட்டாராம்.நீ புலி  ! ஒரு பலமான மிருகம் .உன்னை விட பலமானவை யாரும் இல்லை .பிறகேன் யாரை பார்த்து பயந்து ஓடி வருகிறாய்?என்று பு(எ)லி மூச்சிரைக்க இரைக்க  சொல்லிச்சாம்,வழியிலை ஒரு பூனையை பார்த்தேன்.என்னை கொன்று தின்று விடும் என்று பயத்தில ஓடிவந்துட்டன் என்றதாம்.
ஒரு எலியை பலம்வாய்ந்த  புலியாகதோற்றத்தில் மாற்றினாலும் 
அது எலிக்கான பயக்  குணத்துடனே இருக்கிறது.உடல் பலத்தால் பலனொன்றும் இல்லை.துணிவற்றவர்கள் உடலால் புலியாய்  இருந்தாலென்ன,எலியாய் இருந்தாலென்ன ? என்று மத்திரவாதி உணர்ந்துகொண்டாராம்.புலியாக மாறின எலியாய் திருப்பவும் எலியாய் மாற்றி அனுப்பிவச்சாராம்..
இப்படித்தான் நரியாக இருந்த சிலபேர் புலியாய் மாறி உலாவந்தவை.புலியளைப் போல உறுமிக்கொண்டும் திரிந்தவை .சிங்கத்தை கண்டால் சீற்றம் கொண்டவை . திடீரென  ஒரு நாள் புலிகள் எல்லாம் மாயமாகி விட நரிகளுக்கு உறுமத்  தெரியவில்லை. சிங்கத்தைப் பார்க்க பயம் வேற பற்றிக்கொண்டது .நிமிர்ந்து நிக்கிறதை விட குனிஞ்சு நிக்கிறது தான் மரியாதை,பணிஞ்சு போறதுதான்  பண்பாடு என்று உயிர்வாழ வழி தேடி இப்ப ஊளையிடத் தொடங்கியிருக்கினம். ஊளையிடுறதால சாயம் வெளுத்துப் போய்  இப்ப வேஷம் கலைஞ்சு நிக்கினம். 

Friday, 14 January 2011

இறந்து போயிருந்தேன்.நான் இறந்து போயிருந்தேன்
சுற்றி அழும் குட்டம் ஏதுமற்று
தனியாக வழி தவறிய மலை உச்சியின்  நேர்
கீழே என் உடல்.

இன்னும் சற்று நேரத்தில்
இறந்து போகும்  என் செல்பேசியும்  
 தொடர்ந்து அழைப்புகளுக்கு 
பதிவு செய்யப்பட்ட  பதில்களை  கேட்டு
வெறுத்துப் போன மனைவி 
சபித்துக்கொண்டே  அடுப்பை அணைப்பாள்.

நாளையோ  அதற்கடுத்த நாளோ
என்னை தேடும் உத்திகள்
மேற்கொள்ளப்படும் அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில் 
நான் உயிருடன் தான் இருப்பேன்....

மாறுமா இந்த போர் முகம்.

போர்க்களங்களில் தீர்வுகள்
இலகுவாகிவிட்டன.

நீயும் நானும் பெற்றெடுக்கும்
குழந்தை உயிர் துறக்க
போகும்  இந்தப் போர்க்களம்
நம்மோடு முடிந்து போகட்டும்.

விமானங்கள் மனங்களை
தீர்மானித்து விட்டன.

மிகக்  கொடூரமான
அனுபவத்திலிருந்து நமது 
விமானங்கள் எழும்புகின்றன.

எனது காயத்திலிருந்து
வெளியேறுகின்ற குருதி
காவலரணை கழுவுகிறது.....

Wednesday, 12 January 2011

பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்.

சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது.

இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.

பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர்.

இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர்.

நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.


1. பேஸ்புக் பிளேசஸ் (Facebook Places):

இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது.

ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம்.

நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது.

எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.

யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும்.

இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.


2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த:
உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.

உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும்.

நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.


3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?


பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும்.

இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும்.

இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும்.

இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும்.

இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.


4. அப்ளிகேஷன்களுக்குத் தடா:

பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது.

பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும்.

Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applications என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.


5. அணுகுவதற்குத் தடை:

உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.


6.இறுதி நடவடிக்கை:

பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.

இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம்.

இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும்.


Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.

திரும்பிப் பார்க்காமலேயே. பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது.

உலகின் உயரமான பகோடா !-

பகோடா என்றால் நமக்கு சாப்பிடும் பகோடா தான் நினைவுக்கு வரும்.
ஆனால் பகோடா என்பது நமது கோயில்களில் காணப்படும் கோபுரங்களை போன்ற ஒரு வகை கோபுரம் ஆகும்.கோயில் கோபுரங்கள் கீழ் புறத்தில் அகலமாகவும் உயரம் செல்லசெல்ல அகலம் குறைந்து கொண்டே போகும்.
அதே போல் பகோடாவில் அடிப்பக்கம் மிக அகலமாகவும் பெரும்பாலும் வட்ட வடிவிலும் அமைந்திருக்கும்.இவை ஒவ்வொரு அடுக்காக அமைக்கப்பட்டிருக்கும்.அடுக்குகள் ஒற்றைபடையகவே இருக்கும்.ஒற்றை படையால் அதிஷ்டம் ஏற்படும் என்று மக்கள் கருதுவதே இதற்க்கு காரணம்.பகோடவின் மேல் பகுதி ஊசி போல் முடிவடையும்.
பொதுவாக பகோடாக்கள் கோயிலாகவும் கோவிலை சுற்றி உள்ள இடங்களிலும்தான் கட்டப்படுகின்றன.இந்த முறையானது இந்தியாவில் இருந்துதான் ஆசிய நாடுகளில் உள்ள மற்ற இடங்களுக்கும் பரவியது.
பர்மாவின் தற்போதைய பெயரான மியன்மரின் தலை நகரில் உள்ள ஒரு புத்த பகோடத்தான் உலகிலேயே மிகவும் உயரமானது. shwedagon என்று பெயர் கொண்ட இந்த பகோடவின் உயரமானது 97 .9 மீட்டர் ரங்கூனில் உள்ள இத பகோடவின் சுவர்களில் ஒவ்வொரு cm உம் தங்கம் பதிக்கபட்டிருகிறது.
இதனை பார்ப்பதட்காவே பல நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து குவிகிறார்கள்.புத்தர் காலமானதிட்கு பின்,இந்தியாவில் இருந்து கொண்டு செல்லபட்ட புத்தரின் கூந்தல் இங்கு வைக்கபட்டுள்ளது.அதற்காக கட்டப்பட்டதுதான் இந்த பகோடா.
பல நூற்றாண்டு காலமாக இதன் அளவு அதிகரிக்கப்பட்டு இன்று உலகின் உயரமான பகோடவாக உயர்ந்து நிற்கிறது.
இதன் நுழைவு வாயிலில் இரண்டு மிகப்பெரிய சிங்கங்கள் காவல் காப்பது போன்ற சிலைகள் உள்ளன.அதற்கு பின் புறத்தில் பயங்கரமான குணம் உடைய விலங்குகளின் சிலைகள் காணப்படுகின்றன.இந்த பகோடா அமைப்பின் ஒவ்வொரு வேலைப்பாடும் அலங்காரத்துடன் உள்ளதாகும்
பெரிய மேடையை சுற்றி 500 சிறிய தங்கஸ்தூபிகள் உள்ளன.ஒவ்வொரு தூபியிலும் புத்தரின் வாழ்நாளின் அவரைப் பின்பற்றி சென்ற 500 சீடர்களை குறிக்கும்.ஒவ்வொரு ஸ்தூபியின் அடிப்பாகத்தில் காணப்படும் 7
கோடுகளும் புத்தரின் உடையில் உள்ள 7 மடிப்புகளும் குறிக்கும்.இவற்றில் சீனர்களின் பகோடாக்கள் சட்டு மாறுபட்டவை இது 8 படைகளாக இருக்கும்.இவை கற்களாலும்,பளபளப்பான ஓடுகளாலும் பீங்காங்களாலும் கட்டப்படுகின்றன.ஜப்பானியர்களின் பகோடக்களும் ஏறக்குறைய சீனர்களின் பாணியை பின்பற்றியே இருப்பவை.மரத்தினால் இவை செய்யப்பட்டவையாகவே உள்ளன.
அனேகமாக எல்லா பகோடக்களும் தங்கத்தினாலையே அலங்கரிக்க படுகின்றன.

Tuesday, 11 January 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் பாடல்.

பிப்ரவரி 19 ஆரம்பமாக உள்ள உலக கோப்பை கிரிக்கெட்போட்டியின் பாடலுக்கு பாலிவுட்டில் புகழ்பெற்ற சங்கர் மகாதேவன்,இசான், லாய் ஆகியோர் இசையமைக்கிறார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.உலகக் கோப்பை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடப்பதால் இந்தப் பாடல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளில் இசை அமைக்கபட்டிருகிறது.

Monday, 10 January 2011

ஐ.பி.எல். ஏல முழு விபரமும் அணிகளின் நிலையும்..

[ ஞாயிற்றுக்கிழமை, 09 சனவரி 2011, 03:12.15 பி.ப GMT ]
பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலத்தில் இலங்கை வீரர் ஜெயசூர்யவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதேவேளை நேற்று நடைபெற்ற ஏலத்தில் சவ்ரவ் கங்குலி, பிரைன் லாரா, கிரிஸ்கெய்ல் ஆகியோரும் நேற்று ஏலத்தில் எடுப்பட வில்லை.
எனினும் யாரும் அறியாத அவுஸ்திரேலிய சகலதுறை ஆட்டகாரர் கிறிஸ்டியனை டெக்கான் சார்ஜர்ஸ் அணி ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்தியன் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான 4ஆவது தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் முதல் நாள் நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் கவுதம் கம்பீர் அதிகபட்சமாக ரூ.11.04 கோடிக்கு ஏலம் போனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.


ரொபின் உத்தப்பாவை புனே அணியும், யூசுப் பதானை கொல்கத்தா அணியும் ஏலம் எடுத்தன. இவர்கள் இருவரும் தலா ரூ.9.66 கோடிக்கு விற்பனையானார்கள். இந்திய அணியின் மற்றொரு வீரர் ரோஹித் சர்மா 9.20 கோடிக்கும், இர்பான் பதான் ரூ.8.74 கோடிக்கும், யுவராஜ்சிங் ரூ.8.28 கோடிக்கு முறையே மும்பை, டெல்லி, புனே அணிகளால் வாங்கப்பட்டனர்.


சவ்ரவ் கங்குலி, பிரைன் லாரா, கிரிஸ்கெய்ல் ஆகியோரை முதல் சுற்றில் எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனிடையே, இன்று இரண்டாவது நாளாக ஏலம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் அணியைச் சேர்ந்த அதிகம் பிரபலமாகாத சகலதுறை வீரர் டேனியல் கிறிஸ்டியனை டெக்கான் சார்ஜர்ஸ் அணி ரூ.4.10 கோடிக்கு ஏலம் எடுத்தது.

தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜியை கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. டெல்லி அணி உமேஷ் யாதவ், அசோக் ஜிண்டா, அஜித் அகர்கர் ஆகியோரை ஏலம் எடுத்தது. முனாப் பட்டேலை மும்பை இந்தியன்ஸ் அணி சுமார் ரூ.3.22 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இலங்கை அணியின் மின்னல் வேக ஆட்டக்காரராக திகழ்ந்த ஜெயசூர்ய ஏலம் எடுக்க ஆளில்லாமல் போனார். இதேபோல முஹமது கைப், இங்கிலாந்தின் மைக்கேல் ஹார்டி, நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம், கெய்ல் மில்ஸ், இங்கிலாந்து அணியின் ரவி பொப்பாரா, மான்டி மனேசர், டின் பிரசன்னர், இலங்கையின் பர்வேஸ் மகரூப் ஆகியோரும் ஏலம் போகவில்லை.

சென்னை அணியில் அஸ்திரேலிய வீரர் பெல் கெல்பான்ஸ்கோ 46 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

வீரர்கள் விலை முழு விவரம் : இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு:

சென்னை சூப்பர் கிங்ஸ்:
 ஆர் அஸ்வின் 850,000 அமெரிக்க டொலர்
 எஸ் பத்ரிநாத் 800,000 அமெரிக்க டொலர்
 டோக் போலிங்கர் 700,000 அமெரிக்க டொலர்
 மைக்கல் ஹசி 425,000 அமெரிக்க டொலர்
 ட்வைன் ப்ராவோ 200,000 அமெரிக்க டொலர்
 விரிதிமன் சாகா 100,000 அமெரிக்க டொலர்

டெக்கான் சார்ஜர்ஸ்
 டேல் ஸ்டெயின் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்
 கெமரூன் ஒயிட் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்
 குமார் சங்ககார 700,000 அமெரிக்க டொலர்
 கெவின் பீட்டர்சன் 650,000 அமெரிக்க டொலர்
 ப்ரக்யான் ஓஜா 500,000 அமெரிக்க டொலர்
 இஷாந்த் சர்மா 450,000 அமெரிக்க டொலர்
 அமீத் மிஷ்ரா 300,000 அமெரிக் டொலர்
 ஜே பி டூமினி 300,000 அமெரிக்க டொலர்
 ஷிகார்தவான் 300,000 அமெரிக்க டொலர்

டில்லி டேர்டெவில்ஸ்
 இர்பான் பதான் 1.0 மில்லியன் அமெரிக்க டொலர்
 டேவிட் வார்னர் 750,000 அமெரிக்க டொலர்
 மொர்னே மொர்கல்475,000 அமெரிக்க டொலர்
 ஜேம்ஸ் ஹோப்ஸ் 350,000 அமெரிக்க டொலர்
 ஹெரோன் பிஞ்ச் 300,000அமெரிக்க டொலர்
 நாமன் ஓஜா 270,000 அமெரிக்க டொலர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 டேவிட் ஹசி 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்
 ஹெடம் கில்கிறிஸ்ட் 900,000 அமெரிக்க டொலர்
 தினேஷ் கார்த்திக் 900,000 அமெரிக்க டொலர்
 பியுஸ் சாட்ஙா 900,000அமெரிக்க டொலர்
 அபிஷேக் நாயர் 800,000 அமெரிக்க டொலர்
 பிரவீன் குமார் 800,000 அமெரிக்க டொலர்
 ஸ்டூவர்ட் போர்டு 400,000அமெரிக்க டொலர்
 ரியான் ஹாரிஸ் 325,000 அமெரிக்க டொலர்

கொச்சி
 மஹேல ஜெயவர்த்தன 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்
 முத்தையா முரளிதரன் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்
 ரவிந்த்ர ஜடேஜா 950,00 அமெரிக்க டொலர்
 ஸ்ரீசந்த் 900,000 அமெரிக்க டொலர்
 ஆர் பி சிங் 500,000 அமெரிக்க டொலர்
 ப்ரண்டன் மெக்கல்லம் 475,000 அமெரிக்க டொலர்
 பிராட் ஹோட்ஜ் 425,000 அமெரிக்க டொலர்
 வி வி எஸ் லஷ்மண் 400,000 அமெரிக்க டொலர்
 பார்த்தீவ் பட்டேல் 290,000அமெரிக்க டொலர்
 ஸ்டீவன் ஸ்மீத் 200,000 அமெரிக்க டொலர்
 ரமேஷ் பவார் 180,000 அமெரிக்க டொலர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 கவுதம் கம்பீர் 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்
 யூசூப் பதான் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்
 கலிஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்
 மனோஜ் திவாரி 475,000அமெரிக்க டொலர்
 ஷாகிப் அல் ஹசன் 425,000 அமெரிக்க டொலர்
 பிரட் லீ 400,000 அமெரிக்க டொலர்
 யோயின் மோர்கன் 350,000 அமெரிக்க டொலர்
 பிரட் ஹாடின் 325,000 அமெரிக்க டொலர்

மும்பை இந்தியன்ஸ்
 ரோகித் சர்மா 2 மில்லியன் அமெரிக்க டொலர்
 ஹெண்ரு சைமண்ட்ஸ் 850,000 அமெரிக்க டொலர்
 டேவி ஜேகோப்ஸ் 190,000 அமெரிக்க டொலர்
 ஜேம்ஸ் ப்ராங்க்லின் 100,000அமெரிக்க டொலர்


புனே வாரியர்ஸ்
 ரொபின் உத்தப்பா 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்
 யுவராஜ் சிங் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்
 ஏஞ்லோ மேத்யூஸ் 950,000 அமெரிக்க டொலர்
 ஹசிஸ் நெக்ரா 850,000 அமெரிக்க டொலர்
 கிரேம் ஸ்மீத் 500,000 அமெரிக்க டொலர்
 காலம் பெர்குசான் 300,000 அமெரிக்க டொலர்
 டிம் பெயின் 270,000 அமெரிக்க டொலர்
 நாதன் மெக்கல்லம் 100,000 அமெரிக்க டொலர்

ராஜஸ்தான் ரோயல்ஸ்
 ரோஸ் டெய்லர் 1 மில்லியன் அமெரிக்க டொலர்
 ஜோகன் போத்தா 950,000 அமெரிக்க டொலர்
 ராகுல் டிராவிட் 500,000 அமெரிக்க டொலர்
 போல் காலிங்வுட் 250,000 அமெரிக்க டொலர்


பெங்களூரு ராயல் செலஞ்சர்ஸ்
 சவுரப் திவாரி 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்
 ஏபி டி வில்லியர்ஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்
 ஜாகிர் கான் 900,000 அமெரிக்க டொலர்
 புஜாரா 700,000அமெரிக்க டொலர்
 திர்க் நான்ஸ் 650,000அமெரிக்க டொலர்
 தில்ஷான் 650,000அமெரிக்க டொலர்
 டேனியல் வெட்டோரி 550,000அமெரிக்க டொலர்


கம்பீர் சாதனை :

இன்றைய ஏலத்தில் கவுதம் காம்பீர் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார்.

விலைபோகாதவர்கள் :

தமிம் இக்பால், சமாரா கபுகேடேரா, முரளி கார்த்திக், அஜந்த மெண்டிஸ், கிரெம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர்சன், தில்காரா பெர்ணாண்டோ, லுக் ரைட், மேட் ப்ரையர், மார்க் பவுச்சர், கிரேம் மனோ, பிரையன் லாரா, கிப்ஸ், ஜெசி ரைடர், சவுரவ் கங்கூலி மற்றும் கிறிஸ் கெயில்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக இருபது-20 தொடர் நடந்தது. நான்காவது தொடர் எதிர்வரும் ஏப், 8 இல் துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி போன்ற 8 அணிகளுடன் சேர்த்து, புதியதாக புனே கொச்சி என மொத்தம் 10 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.

வீரர்கள் தக்கவைப்பு :

சென்னை சூப்பர் கிங்ஸ் (தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்), மும்பை இந்தியன்ஸ் (சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா) அணிகள் தங்களது 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ராஜஸ்தானின் வார்ன், வாட்சன், பெங்களூருவின் விராத் கோஹ்லி மற்றும் டில்லியின் சேவக் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.20 கோடி முதல் ரூ. 45 கோடி வரை செலவிடுகிறது.

Saturday, 8 January 2011

பயமாயிருக்கின்றது !

இப்போதெல்லாம்.... 
இரவுகளைவிட 
பகலில்தான் பயமாயிருக்கின்றது! 
எதிரிகளை விட 
நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள் .
கடலைவிட 
குளங்களே ஆழமாக உள்ளது.
கோவிலை விட உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது .
ஒரிஜினலை விட 
ஒப்பனைகளே மேடையேற்றப்படுகின்றன .
விரல்களை விட்டுவிட்டு 
நகங்களுக்கே வர்ணம் பூசுகிறோம். 
வெற்றியை கொடுத்தவனைவிட 
பெற்றவனே போற்றப்படுகிறான் ஜனநாயகத்தில்.....!

Friday, 7 January 2011

முடிவே இல்லையா !

கொன்று குவித்தது
உடல்களை மட்டும் அல்ல
உணர்வுகளையும்...!
எம் துப்பாக்கிகள்
மௌனித்த போதும்
இன்னும் தொடரும்
சத்தமில்லா கொலைகள்.
முள் வேலிக்குள்
இன்னும்
சிறை கிடக்கும்
மக்களின் உயிர்களை
உறிஞ்சிய களைப்பில்
தினமும் மௌனிக்கும் இரவில்
விடியலை எதிர்பார்த்து
எதிரியின் துப்பாக்கிகள்.!

Thursday, 6 January 2011

புடவை தலைப்பினிலே ...!

பள்ளி செல்லும் வழியில்
சேற்றில் கால் வைக்காதே
அம்மா கத்தினாலும்
உள்மனம் அழுக்கு பட
ஆசையோடு ஓடி ஓடி
மிதித்து குதிக்கும்
வேகமாய் முதுகில் தாளமிட்டு
என்னை ஒப்பாரி பாட செய்து
இழுத்து செல்வாள்
வெறுங்காலில் அனைத்தையும்
மிதித்து நடந்தபடி .
என் பள்ளி சுமை
அவள் இடுப்பில்
ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும்
கருமேகம் சத்தமிட்டு
சிதறிய மழைத்துளிகள்
வேகமாய் எனை
நனைக்க உடனே
அம்மா குடை விரித்தாள்
புடவை தலைப்பினிலே ...!
என்னை நனைத்தால்
அன்பு மழையினிலே..!!
புரியாத வயதில்
ஏதேதோ செய்தாய்
எல்லாம் புரிந்த போது
எனை விட்டே போனாய் .
ஒவ்வொரு மழைக்காலமும்
உனை தூறியே செல்லும் ...!

Monday, 3 January 2011

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க ! –

ஒரு பார்வை

தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட்  பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியாசம்.  ஒரு நல்ல நண்பனிடம் யதார்த்தமாய் உரையாடுவதை போன்ற அவரது எழுத்து நடை மனசுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கிறது.
நம் கனவுகள், குறிகோள்கள், உழைப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நம்பிக்கைபின்னணியில் நம் மனம்தான் அத்தனையையும்   தீர்மானிக்கும் சக்தி என்பதை ரொம்பவும் உளவியல் ரீதியில் அலசாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் இருந்தே எடுத்துகாட்டியிருப்பது சிறப்பு. எல்லாவற்றிற்கும்
இது அட்வைஸ் செய்கிற புத்தகம் அல்ல. சந்தோஷமான நம் வாழ்கையே ரொம்ப சந்தோஷமாக மாற்றுவதற்கு கோபி கொடுக்கும் சுவாரசியமான சில டிப்ஸ் அவ்வளவே.
நமக்கு நாமே கேள்வி கேட்டு பதில் சொல்லும்படியான சூழ்நிலைகளை புத்தகம் முழுதிலும் விரவ விட்டுள்ளார். நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள அருமையான வாய்ப்பு இந்த புத்தகம்.


“சந்தோஷம் எதில் இருக்கிறது? 
ரொம்ப சுலபம்.
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் அது இருக்கிறது”
“உங்களை அடுத்தவர் ரசிக்க வேண்டும்,கவனிக்க வேண்டும், உங்கள் சிறப்பியல்புகளை, உங்கள் தனித்துவங்களை அடையாளங்கண்டு பாராட்ட வேண்டும் என்று நீங்கள் ஆசைபடுவது உண்மை என்றால், அதை உங்களில் இருந்து நீங்கள்தான் தொடங்க வேண்டும் “
இது போன்ற பாசிடிவ் எனர்ஜி  எல்லா பக்கங்களிலும் பரவி கிடப்பதால் இந்த புத்தகத்தை படிப்பதே ஒரு பாட்டில் குளுகோஸ் குடிப்பது போல.. படித்து பாருங்கள்.. உங்களுக்குள்ளும் ஒரு உற்சாகம் தொற்றிகொள்வதை உணர்வீர்கள்.
ஆசிரியர் பற்றி..
விஜய் டிவியில், கோபிநாத், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் எல்லோருடைய கவனம் ஈர்த்தவர். கணீர் பேச்சும், தோழமையான அணுகுமுறையும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் வட்டத்தை உண்டாக்கி வைத்திருக்கின்றன.
2004 ம் ஆண்டு – இந்தியாவின் மிக சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துனராக அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டவர்.
2007  ம் ஆண்டில்  சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், 2008 ம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த பத்து நபர்களுள் ஒருவராகவும் ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2008 – சிறந்த இளம் இந்தியர் – ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல்.

பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பிலிருந்து’ ஒரு பகுதி!

தென்றலுக்கு நன்றி.

கமுகொடு நெடிய தென்னை
கமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை
உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!
தமிழ் எனக் ககத்தும், தக்க
தென்றல் நீ புறத்தும் இன்பம்
அமைவுறச் செய்வதை நான்
கனவிலும் மறவேன் அன்றோ?


ஒத்துண்ணல்.
இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை!


கூடத்திலே மனப் பாடத்திலே – விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் – அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி – தனிற்
பட்டுத் தெறித்தது மானின் விழி.
ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் – இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்.நீலவான் ஆடைக்குள்.

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து, 
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் 
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற் 
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? – வானச் 
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!

ஆற்றுநடை.

நோய் தீர்ந்தார், வறுமை தீர்ந்தார்,
நூற்றுக்கு நூறு பேரும்!
ஓய்வின்றிக் கலப்பை தூக்கி
உழவுப்பண் பாடலானார்!
சேய்களின் மகிழ்ச்சி கண்டு
சிலம்படி குலுங்க ஆற்றுத்
தாய் நடக்கின்றாள், வையம்
தழைகவே தழைக்க வென்றே!

தமிழை என்னுயிர் என்பேன்.

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் 
கழையிடை ஏறிய சாறும் 
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் 
பாகிடை ஏறிய சுவையும் 
நனிபசு பொழியும் பாலும் – தென்னை 
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.

படைத் தமிழ்.

இருளினை, வறுமை நோயை
இடருவேன்; என்னுடல் மேல் 
உருள்கின்ற பகைக்குன்றை 
நான் ஒருவனே உதிர்ப்பேன்; 
நீயோ கருமான்செய் படையின் வீடு;
நான் அங்கோர் மறவன்! கண்ணற் 
பொருள்தரும் தமிழே! 
நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி!

பாரதி பற்றி பாரதிதாசன்.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு 
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக் 
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா! 
காடு கமழும் கற்பூரச் சொற்கோ! 
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்! 
திறம்பட வந்த மறவன், புதிய 
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற் 
படரும் சாதிப்படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும் 
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்.

அழகின் சிரிப்பிலிருந்து.

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து 
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள் 
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் 
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என் 
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!