Welcome to our site.!!

Friday, 31 December 2010

காசி ஆனந்தன் கவிதை சிதறல்கள்.

தெளிதல்
சாமி குளத்தில்
நீராடினால்
தீக்காயுசு
என்றான்
குளத்தில் இறங்கினேன்..
மிதந்து கொண்டிருந்தது
செத்த மீன்குஞ்சு!

குணம்
திருத்தும்
அறிவு
திருடரை
என்கிறாய்...
நூல் நிலையத்தில்
புத்தகம்
திருடும்
அறிவாளரை
மறந்து!


புரளி
வதைக்கப்படும் பெண்ணுக்காக பெண்தான்
போராடவேண்டும்
ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டவனுக்காக தாழ்த்தப்பட்டவன் தான்
போராடவேண்டும் என்கிறாய்.......
அழிக்கப்படும் காட்டுக்காக காடுதான்
போராடவேண்டும்
என்கிறாயா?

ஐயம்
எந்த மனிதனையும் நம்புவதே இல்லை எந்த மனிதனும்
ஒவ்வொரு வீட்டின் கதவிலும் பூட்டிலும் உடைந்து கிடக்கிறது
மனிதம்.!

போராட்டம்
வளைந்தால் வில்லாக வளை
விழுந்தால் இடியாக விழு
உடைந்தால் குண்டாக உடை
உன் எதிரி இருக்கும் வரை.!

உறுத்தல்
நேசிக்கிறேன் என் மண்ணின் பறவைகளை
எங்களிலும் கூடுதலாக எங்கள் மண்ணை நேசிப்பதால்
எதிரி குண்டு வீச்சில் எங்கள காடுகள் எரிந்தும்
வெளிநாடு நோக்கி விரியாத சிறகுகள்.!

கூடு
சொந்த வீடு கட்டுகிறது குருவி
நான் குடி இருக்கும் வாடகை வீட்டில்.!


தேர்தல்
வாங்கலாம் மானத்தை எப்படியும்.
சேலை களைந்தும் சேலை வாங்கியும்.!

நெருப்பு
உன்னை ஒதுக்கவும்
வெளியே வைக்கவும் இவன்-யார்?
சொல் இனி..
எங்கள் சேரிக்கு வெளியே உங்கள் ஊர்.!


சிதைவு
விற்கிறான்
தண்ணீர் பொட்டலம்
குற்றாலம் அருவிக்கரையில்.!



நிமிர்வு
வாழ்க்கை போராட்டம் ஆனது.
நிமிர்ந்தேன் போராட்டம் வாழ்க்கை ஆனது.!

போராளி
செத்தவனுக்காக  அழுதவன் நீ
இவன்-அழுதவனுக்காகச்
செத்தவன்.!


வல்லாண்மை
பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி வைதிருக்கிறவனை
அணு குண்டு 
 வைத்திருக்கிறவன்.!

1 comment: