Welcome to our site.!!

Friday, 31 December 2010

உயிரோடை தமிழ்- மக்கள் வானொலி

எம் அன்புக்குரிய தமிழ் உறவுகளே.

தியாகங்களும்,அர்ப்பணிப்புகளும்  ,வலிகளும் ,வேதனைகளும் ,துரோகங்களும்  நிறைந்த எமது  ஆயுத  போரட்டம் முள்ளிவாய்க்காலில்  மௌனிக்கபட்டுவிட்டன.ஆயுத  போரட்டம் மௌனிக்கபட்டு விட்டாலும் கூட எமது   ஈழ போராட்டம் பல புதிய பரிமாணங்களை எடுத்து இன்னமும் புதிய வடிவங்களில் நடந்து கொண்டுதான்  இருக்கின்றன .
இந்த புதிய போராட்ட பரிமாணங்களின் பெரும் பொறுப்பு புலம் பெயர் வாழ் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கபட்டு இருக்கிறது.


இன்றைய உலகில் ஒரு பலமான அரசாங்கங்களுக்கு  பக்க பலமாக இருப்பது ஊடகங்களே  ஆகும்.அத்தகைய  பலமான ஊடகம் ஒன்று  தமிழ் மக்களுக்கு அவசியமாக இருக்கிறது. இன்றைய நிலையில் புலம் பெயர் நாடுகளில் பல தமிழ் ஊடகங்கள் செயற்படுகின்றன.ஆனால்  அவைகள் அனைத்தும் ஒரு தனி மனிதனுக்கு இல்லை தனியார் நிறுவனங்களுக்கு  சொந்தமான தனியார் வானொலிகளே.

தாயகம்-தேசியம்-தன்னாட்சி என்ற எமது இலக்கை நோக்கிய எமது பயணத்துக்கு பக்க சார்பு அற்ற மக்கள் வானொலி ஒன்று அவசியம் தேவைபட்ட தருணத்தில் புலம் பெயர் மக்களால் எமது மக்களுக்காக புலம்பெயர் மக்களையும் ஈழ மக்களையும்  இணைக்கும் ஒரு பாலமாக  அனைத்துலக உயிரோடை தமிழ் மக்கள் வானொலி ஆரம்பிக்கப்பட்டு,

ஐரோப்பா-மத்திய கிழக்கு செய்மதி -  Hotbird 11642 , Symbol Rate 27500 

பிரித்தானிய + மத்திய அலைவரிசை - MW 558 (6pm - 9pm)

இணையம் - http://www.ilctamil.co.uk/

மற்றும் கைத் தொலைபேசிகளில் http://www.ilctamil.com/  (இல்தொலைபேசிக் குறியீடு )
வெற்றிகரமாக தனது சேவையை வழங்கிக்கொண்டு  இருக்கிறது.


உயிரோடை தமிழ் மக்கள் வானொலியின் ஒரே இலக்கு தாயகம்! தேசியம்! தன்னாட்சி! தனியார் ஊடகம்    இல்லாது  மக்கள் வானொலியாக நடாத்துவதுக்கு தமிழ் மக்களின் ஆதரவுகள் அன்பளிப்புகள் நன்கொடைகள் அவசியமானது. இன்றைய உலகில் பெரும்பாலும் அரசாங்கங்கள் தங்கள் நாட்டு ஊடகங்களுக்கு நிதி உதவி செய்து ஊடகங்களை தங்களுக்கு பலமாக வளர்த்து வருகின்றன.இன்றைய எமது நிலையில் எமக்கு என்று ஒரு அரசாங்கம் இல்லை.எமக்கு என்று ஒரு அரசாங்கம் நிறுவும் வரை உயிரோடை தமிழ் மக்கள் வானொலியை வளர்த்து எடுக்கும் பணி எமது மக்களையே சார்ந்தது   ஆகும்.இது உங்கள் வானொலி  உங்கள் மக்களில் ஊடகம் தயது செய்து உங்களால் ஆனா உதவிகளை இந்த வானொலிக்கு செய்யுங்கள்.



எண்ணித் துணிவோம் ! ஒன்றிணைந்து எழுவோம் ! இலக்கை வெல்வோம் !


 வானொலி பணிமனை
432,Alexandra Ave
Rayners Lane
Harrow
Middx
HA2 9TW
UK.

தொடர்புகளுக்கு

மின்னஞ்சல் : www.info@ilctamil.com  &  radio@ilctamil.com
தொலைபேசி : + 44 208 930 6568
                               + 44 208 930 5341
                               + 44 775 432 3969

1 comment: