Welcome to our site.!!

Thursday, 30 December 2010

நாழிகையின் முதற்கிறுக்கல்.

வெப் உலக நண்பர்களுக்கு வணக்கம் ,
எங்கள் நாழிகை என்கின்ற தலைப்பை பார்த்து நீங்கள் எதோ வித்தியாசமா சொல்லவாறாங்கள் என்று நினைக்க வேண்டாம்
நாலு விடயங்கள் தெரிஞ்சவங்கள் மாதிரி தமிழை  தலைகீழா நின்று படிசவங்களை போல வசனங்களை அங்க பிரிச்சு இங்க சேர்த்து எதோ இலக்கணம் இலக்கியம் என்று எங்களுக்கு தெரியாத எல்லாம்   எழுதி உங்களை அழ வைக்க மாட்டம் நம்புங்கோ.


நாங்கள் நான்கு நண்பர்கள் புலம்பெயர் நாடுகளில் வேலை வெட்டி இல்லாமல் நம்ம ஊர் விடயங்கள்  உலக விடயங்கள் என்று பல விடயங்களை பற்றி எங்களுக்கு தெரிஞ்ச விடயங்களை பேசுவம். கண்டிப்பா கல்வி சம்மந்தப்பட்ட விடயங்களை பற்றி பேசுறது இல்லை ஏன் என்றால்  தெரியாத விடயங்களுக்கு மூக்கு நுழைக்கிறது நல்ல பழக்கம் எங்க கிட்ட இல்லை.நாங்கள் வேலைக்கு போக மாட்டம் என்று நாங்கள் அடம்பிடிக்கிறது இல்லை. எங்கட தகுதிக்கு ஏற்ற வேலை இன்னும் கிடைக்கல.வேலைக்கு போனால் ஆங்கிலம் தண்ணி மாதிரி பேசணும் எண்டு சொல்லுறாங்கள்   எங்களுக்கு தண்ணி அடிக்கிற நல்ல பழக்கம் இல்லை. அதனால வேலையும்  கிடைக்கிறது இல்லை.என்ன தான் நாங்கள் கஷ்ட பட்டாலும்  தமிழன் கிட்ட வேலை கேட்டு போறது இல்லை என்ற முடிவோடு தான் இருக்கிறம்.  அவன்  பேசிப் பேசியே எங்களை மொக்கை போடுறதை விட சும்மா
வெட்டியா இருக்கிறதே மேல் என்று முடிவு எடுத்து இருக்கிறம். அப்புறம் பல இடங்களில் ஏறி இறங்கி பார்த்தம் வேலை கிடைக்கல.
இப்படியே எங்கள் வாழ்க்கை எதிர்காலம்  தெரியாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

வழமை போல நண்பர்கள் மொக்கையா பேசிக்கிட்டு இருந்தம் . எங்களில   கூட படிச்ச நண்பன்ஒருத்தன் சொன்னான் மச்சான் நாங்கள்
சும்மா facebook ல பொண்ணுகளுக்கு கமெண்ட் போட்டு பேச்சு வாங்காமல்
நாங்கள் பிளாக்கர் ஒன்று திறந்து அதில மொக்கை போடுவம் டா, எங்களுக்கு தெரிஞ்சதை மற்றவர்களும் தெரிஞ்சு கொள்ளுறது  போல எழுதுவம் டா என்று சொன்னான். அவன் சொன்ன டீலிங் எங்களுக்கு பிடிச்சு இருந்திச்சு. அதனால நாங்கள் நாழிகை என்கிற தலைப்பில் பிளாக்கர் திறந்து எழுத ஆரம்பித்து இருக்கிறம்.உங்களுக்கு தெரிஞ்ச தெரியாத பலவிடயங்களை நாங்கள் எழுதுவம் கண்டிப்பா   இந்த பிளாக்கர் உங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு தளமாக இருக்கும் .

நாங்களும் வந்துட்டம்ல.

நன்றி.
   

1 comment: