Welcome to our site.!!

Tuesday, 31 January 2017

ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை !ரஜினியை விமர்சிப்பதையே பொழுதுபோக்காக கொண்டவர்களுக்கு மட்டும் இப்பதிவு

'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா,கர்நாடகக்காரன், தமிழின விரோதி' - இது ரஜினி குறித்து சில அறிவு ஜீவிகளின் விமர்சனம்!

ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்...

Wednesday, 25 January 2017

இதற்குப் பெயர் வன்முறை இல்லை?...படங்களின் தொகுப்பு !

மயிலாப்பூர் சிட்டி செண்டர் அடுத்துள்ள அம்பேத்கர் பாலம் - தலித்துகள் வசிக்கும் ரூதர்புரம் பகுதிக்குள் நுழைந்த அதிரடிப்படையினர் முப்பதுக்கும் அதிகமான ஆட்டோக்கள், டூ வீலர்கள், கார்களை அடித்து நொறுக்கியும் பெட்ரோல் டாங்குகளை திறந்துவிட்டு கொளுத்தியுள்ளனர். 

Tuesday, 24 January 2017

கலவரங்களுக்கு காரணம் யார்?


சேனாதிபதி, ஆதி, ராஜசேகர் போன்றோர் பன்னீர் செல்வத்தை சந்தித்து விட்டு வந்து போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது, மெரினாவில் போராடும் மாணவர்களுக்கு அதிருப்தியை உருவாக்கியது. 
மெரினாவில் வெவ்வேறு குழுக்கள் அரசியல் இயக்கங்கள் தனித் தனிகுழுக்களாக மேடை அமைத்த போதிலும் இக்கருத்துகள் எதையும் போராடும் மாணவர்கள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.

இன்று காலை 10 மணிக்கு ஊடகங்களை அழைத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்கிறோம் என்று அறிவிக்க இருந்தார்கள். ஆனால் நேற்று இரவே இரண்டு ஊட்கங்கள் சென்று மாணவர்களை கலைந்து செல்லுங்கள் என்று மாணவர்களை நிர்பந்தித்திருக்கிறார்கள். அதிகாலை மூன்று மணியளவில் ஒரு தொலைக்காட்சி லைவ் வேனுக்குள் டெலிகாஸ்டுக்காக தயராக மாணவர்கள் சந்தேகம் அடைந்து அவர்களிடம் கேட்க அவர்களோ மழுப்பியிருக்கிறார்கள். 

"69 " வீடியோ விமர்சனம்(அனிருத் ). 18+ !


சோம்பேறிக்காதலனுக்கும் துணிச்சல்மிக்க காதலிக்கும் நடக்கும் மூன்று நிமிட போராட்டம்தான் படம்.இவ்வளவு சிக்கலான கதையை வாயில் எடுத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பாக இதற்கு முன் யாரும் சொல்லியதில்லை. முதலில் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஹீரோ 40 கிலோ என்றால் ஹீரோயின் அதில் இருமடங்காக 80கிலோ என கதாபாத்திரத்தேர்வுக்கே நெறய மெனக்கெட்டிருக்கிறார்கள்.

Saturday, 21 January 2017

பழைய Joke தங்கத்துரை !

கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட
மாட்டேன்!


பையன்:
உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!


கேர்ள்: ஏன்?


பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!

கபிலனின் கிறுக்குகள் !

 


                                
முக்கியமா சொல்லனுமே முதல் வரில
சத்தியமா கவிதை இல்ல

காலமெல்லாம் என் கதையும்
கவி பாடதான் கனா கண்டேன் - ஆனால்
கண்ணீருக்கு தானே தெரிந்தது
கவிதை வடிக்க

Wednesday, 18 January 2017

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் !

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் !. இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன்.இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன்.தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன். நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன்.அனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும் !! நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.